பொது செய்தி

தமிழ்நாடு

தீ அணைக்க உதவும் 'ஏரியல் லேடர்' கோவைக்கு இன்னும் கிடைக்கலை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் சமீபகாலமாக அதிக உயரம் கொண்ட, கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இக்கட்டடங்களில் தீவிபத்து ஏற்பட்டால், அணைக்க தேவையான ஏரியல் லேடர் எனும் உயரமான ஏணி, இதுவரை வழங்கப்படவில்லை.2013ம் ஆண்டு கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில், நடந்த தீ விபத்தில் தீயை அணைக்க, விமானப்படையின் உதவியை நாட வேண்டியிருந்தது. ஆனாலும், மூவர் பலியாகினர்.மாவட்ட தீயணைப்பு

கோவை:கோவையில் சமீபகாலமாக அதிக உயரம் கொண்ட, கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இக்கட்டடங்களில் தீவிபத்து ஏற்பட்டால், அணைக்க தேவையான ஏரியல் லேடர் எனும் உயரமான ஏணி, இதுவரை வழங்கப்படவில்லை.2013ம் ஆண்டு கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில், நடந்த தீ விபத்தில் தீயை அணைக்க, விமானப்படையின் உதவியை நாட வேண்டியிருந்தது. ஆனாலும், மூவர் பலியாகினர்.மாவட்ட தீயணைப்பு அலுவலர்களின் கோரிக்கையின்படி, விரைவில் ஏரியல் லேடர் வழங்கப்படும் என, அப்போதைய அதிகாரிகள் தெரிவித்தனர். எட்டு ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை.தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவைக்கு ஏரியல் லேடரின் தேவை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X