கோவை:ஆய்வக உதவியாளர் பணிக்கு, பதவி உயர்வு வழங்காததை கண்டித்து, பேரூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில், நேற்று ஊழியர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பதிவறை எழுத்தாளராக உள்ள நான்கு பேருக்கு, உரிய தகுதிகள் இருந்தும், ஆய்வக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இதோடு, காலியிடத்தில் விதிமுறைகளை மீறி, வேறு நபர்களுக்கு, கடந்தாண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், நேற்று மாலை 6:00 மணிக்கு மேல், ஊழியர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லாததால், கிட்டத்தட்ட 8:30 மணியளவில், அலுவலக வளாகத்தில் இரவு உணவு சமைத்து சாப்பிட்டனர். குனியமுத்துார் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பேரூர் கல்வி மாவட்ட தலைவர் அறிவுமணி கூறுகையில், ''விதிமுறைகளுக்கு புறம்பாக, காலியாக இருந்த ஆய்வக உதவியாளர் பணியிடத்தில், ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ''இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் கூறுகையில், ''நான் பொறுப்பேற்ற பிறகு, எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. தற்போது ஆய்வக உதவியாளர் பணியிடம் காலியாக இல்லாததால், என் அதிகாரத்தை மீறி எதுவும் செய்ய முடியாது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE