போலீஸ் குடியிருப்பு சுவர்களில் போஸ்டர் ஒட்டி கொண்டிருந்த, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த காமராஜ், 50 மற்றும் அசோக், 29 ஆகியோரை காட்டூர் போலீசார் பிடித்தனர். இவர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்த போலீசார், ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர்.நகை, பணம் திருட்டுகோவை, மணியகாரம்பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 62. இவர் நேற்று காலை, 7:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, சாவியை அங்கேயே மறைவிடத்தில் வைத்து விட்டு குடும்பத்துடன், பொன்னேகவுண்டன் புதூரிலுள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்.மதியம், 3:00 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வைத்த இடத்திலேயே இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்தார். பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய், 12 பவுன் நகை திருட்டு போயிருந்தது.புகாரின்படி, சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.பான் மசாலா விற்றவர்கள் கைதுபெரியகடைவீதி, ஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு, உக்கடம், ரத்தினபுரி, ராமநாதபுரம், செல்வபுரம், போத்தனுார் மற்றும் குனியமுத்துார் போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், மளிகை கடைகளில், ஹான்ஸ் உள்ளிட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்த, 13 பேர் கைது செய்யப்பட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள், பறிமுதல் செய்யப்பட்டன.மது விற்றவர்கள் கைதுமதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் மாநகர போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட, 12 பேரை கைது செய்தனர். 150க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE