ரூ.380 தினக்கூலி, எட்டாக்கனி மின் ஒப்பந்த ஊழியர்கள் குமுறல்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:மின் வாரியத்தில், 8 ஆயிரத்து 400 ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 2018ல், இவர்களது, தினக்கூலி, 380 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வழங்கப்படவில்லை. கூலி உயர்த்துதல், பணி வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுதல் போன்ற இவர்களது கோரிக்கைகள், கண்டுகொள்ளப்படவில்லை.தினக்கூலியை உயர்த்தி வழங்காவிட்டால், வாழ முடியாது எனக் கூறி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில்,
 ரூ.380 தினக்கூலி, எட்டாக்கனி மின் ஒப்பந்த ஊழியர்கள் குமுறல்

திருப்பூர்:மின் வாரியத்தில், 8 ஆயிரத்து 400 ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 2018ல், இவர்களது, தினக்கூலி, 380 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வழங்கப்படவில்லை. கூலி உயர்த்துதல், பணி வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுதல் போன்ற இவர்களது கோரிக்கைகள், கண்டுகொள்ளப்படவில்லை.தினக்கூலியை உயர்த்தி வழங்காவிட்டால், வாழ முடியாது எனக் கூறி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒப்பந்த பணியாளர்கள், குடியுரிமையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். கோரிக்கை அட்டை, ஆதார் கார்டு மற்றும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளுடன் வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.கோவை மண்டல செயலாளர் பாலா கூறுகையில், ''பேரிடர் நேரத்தில், ஒப்பந்த பணியாளர் கடும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி, 380 ரூபாயை வழங்காமல் ஏமாற்றுகின்றனர். எதிர்பார்த்த தினக்கூலி கிடைக்காவிட்டால், வாழ தகுதியில்லாதவர்களாக மாறிவிடுவோம். எனவே, தினக்கூலியாக 380 ரூபாய் வழங்கி, வறுமையில் வாடும் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X