திருப்பூர்:திருப்பூர் - பல்லடம் ரோட்டில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தென்னம்பாளையம் முதல் சின்னக்கரை பிரிவு வரை 'பறக்கும் பாலம்' கட்டப்படவுள்ளது. கருத்துரு தயாரிக்க 5.7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், பாலம் கட்டுமானப் பணிக்கு மண் பரிசோதனை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.முதல் கட்டமாக சின்னக்கரை முதல் தலா 100 மீ., தொலைவுக்கு ஒரு இடத்தில், 15 மீட்டர் ஆழம் வரை தோண்டி பரிசோதனைக்காக மண் சேகரிக்கப்பட்டது. சின்னக்கரை முதல் கலெக்டர் அலுவலகம் வரை சேகரிக்கப்பட்ட மண் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மண் பரிசோதனைக்கு தென்னம்பாளையம் வரையிலான பகுதியில் குழி எடுத்து மண் எடுக்கப்படும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.இந்த பரிசோதனை முடிவு அடிப்படையில் பாலம் கட்ட துாண்கள் அமைப்பது மற்றும் கட்டுமானப் பணிக்கான கருத்துரு தயாரித்து, பணி அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரப்படும். திட்ட அறிக்கை பரிந்துரைக்குப் பின் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணி துவங்கவுள்ளது.------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE