தமிழ்நாடு

பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு துவக்கம்! மேலும் தாமதம் கூடாது; தொழிற்சங்கங்கள்

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை, நேற்று துவங்கியது. பேச்சில் திருப்தி இல்லாததால், திட்டமிட்டபடி, தொழிற்சங்கங்கள் இன்று தர்ணா நடத்துகின்றன.திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு, 2016ல் போடப்பட்ட சம்பள ஒப்பந்தம், 2020 மார்ச்சில் முடிவடைந்தது. புதிய ஒப்பந்த பேச்சுக்கு, தொழிற்சங்கங்கள் தரப்பில், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கருத்துரு
 பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு துவக்கம்! மேலும் தாமதம் கூடாது; தொழிற்சங்கங்கள்

திருப்பூர்:திருப்பூர் பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை, நேற்று துவங்கியது. பேச்சில் திருப்தி இல்லாததால், திட்டமிட்டபடி, தொழிற்சங்கங்கள் இன்று தர்ணா நடத்துகின்றன.திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு, 2016ல் போடப்பட்ட சம்பள ஒப்பந்தம், 2020 மார்ச்சில் முடிவடைந்தது. புதிய ஒப்பந்த பேச்சுக்கு, தொழிற்சங்கங்கள் தரப்பில், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
கொரோனாவை காரணம் காட்டி, கடந்த ஓராண்டாக, உற்பத்தியாளர் சங்கங்கள், ஒப்பந்த பேச்சு துவக்கவில்லை.இந்நிலையில், புதிய சம்பள ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முதல் சுற்று பேச்சுவார்த்தை, 'சைமா' சங்க அரங்கில் நேற்று காலை நடந்தது. 'சைமா' தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி; ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைசாமி; 'டீமா' தலைவர் முத்துரத்தினம்; 'நிட்மா' செயலாளர் ராஜாமணி; 'சிம்கா' தலைவர் விவேகானந்தன்; 'டெக்மா' பிரதிநிதி கிருஷ்ணன் உட்பட உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மூர்த்தி, செயலாளர் சம்பத்; ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் சேகர்; எல்.பி.எப்., பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், தலைவர் பாலசுப்பிரமணியம்; அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஸ்வநாதன்; ஐ.என்.டி.யு.சி., செயலாளர் சிவசாமி; எச்.எம்.எஸ்., செயலாளர் முத்துசாமி; எம்.எல்.எப்., செயலாளர் மனோகரன்; பி.எம்.எஸ்., சந்தானகிருஷ்ணன் ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.'ஒசைரி நுால் விலை உயர்ந்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளில், ஊரடங்கு நீடிக்கிறது.
இக்காரணங்களால், திருப்பூர் பின்னலாடை துறை இக்கட்டான சூழலில் உள்ளது. அடுத்தடுத்த நெருக்கடிகளால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன,' என, உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.இதற்கு, 'பழைய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டாகிறது. விலைவாசி உயர்வால், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பள பேச்சு துவக்குவதில், உற்பத்தியாளர் சங்கங்கள், மேலும், காலதாமதம் செய்யக்கூடாது,' என தொழிற்சங்கங்கள் தரப்பினர் பதில் அளித்தனர்.''சம்பள பேச்சை இழுத்தடிக்கும் எண்ணமில்லை.
விரைவில் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு, விரைவில் அழைப்பு விடுக்கப்படும்'' என, உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.----புட்நோட்பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை, திருப்பூர் 'சைமா' அலுவலகத்தில், நேற்று, நடந்தது. இதில் பங்கேற்ற, உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள்.
இன்று, திட்டமிட்டபடி தர்ணாதொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:பனியன் தொழிலாளருக்கு, 90 சதவீத சம்பள உயர்வு; வீட்டு வாடகை மாதம் மூவாயிரம், பயணப்படி தினம் 50 ரூபாய் உட்பட 15 அம்ச கோரிக்கைகளுடன், புதிய சம்பள ஒப்பந்தத்துக்கான கருத்துரு, தொழிற்சங்கம் சார்பில், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.கொரோனாவை காரணம்காட்டி, சம்பள பேச்சு துவக்காமல், இழுத்தடித்துவருகின்றனர்.
தற்போது முடிந்துள்ள பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கங்கள் அளித்த கருத்துரு மீது விவாதம் நடத்தப்படவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதா; வேண்டாமா என்பது குறித்தே ஆலோசிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையை மேலும் தாமதப்படுத்தவே, உற்பத்தியாளர் சங்கங்கள் முற்படுவதாக சந்தேகம் எழுகிறது. அதனால், ஏற்கனவே அறிவித்தபடி, நாளை (இன்று), மதியம், 3:00 மணிக்கு, குமரன் சிலை முன், அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில், தர்ணா நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-பிப்-202100:49:44 IST Report Abuse
ஆப்பு நீங்க எதுக்கு பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு.... சுடலை கிட்டே சொல்லுங்க. அவரு உடனே தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பனியன் தொழிகாளர்களுக்கு 10000 ரூவா மாச சம்பளம் அதிகரிக்கப்படும்னு பேசுவாரு. உடனே இ.பி.எஸ் சட்டசபை விதி 110 ஐ பயன்படுத்தி ஆளுக்கு 20000 ரூவாய் சம்பளம் ஒசத்திக் குடுத்து அரசாணை வெளியிட்டிருவாரு. அம்மா அரசு மீண்டும் அமையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X