சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவன் தற்கொலை: பள்ளி முற்றுகை

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என்., ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் குமார்; பனியன் வேஸ்ட் துணி வியாபாரி. இவரது மகன் தேவ மணிகண்டா, 16, அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.தேவமணிகண்டா, வீட்டில் உள்ள ஒரு அறையில் படிக்க சென்றுள்ளார்; கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. பெற்றோர், கதவை உடைத்து பார்த்தபோது, மாணவன், துாக்கிட்டு தற்கொலை
 மாணவன் தற்கொலை: பள்ளி முற்றுகை

அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என்., ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் குமார்; பனியன் வேஸ்ட் துணி வியாபாரி. இவரது மகன் தேவ மணிகண்டா, 16, அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.தேவமணிகண்டா, வீட்டில் உள்ள ஒரு அறையில் படிக்க சென்றுள்ளார்; கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. பெற்றோர், கதவை உடைத்து பார்த்தபோது, மாணவன், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 18-ம் தேதி மாணவனின் தந்தையை அழைத்து, 'மாணவன் சரியாக படிப்பதில்லை; கண்டிக்க வேண்டும்' என்று பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதற்கிடையே, மாணவன் தற்கொலைக்கு, பள்ளியில் கொடுத்த அழுத்தமே காரணம்; பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, பெற்றோர், உறவினர், நண்பர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் சமரசம் செய்துவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X