திருப்பூர்:நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர் படிக்கின்றனர்.இங்கு 2 ஆயிரம் மாணவர்கள் அமரக்கூடிய அளவில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், பல்நோக்கு கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.எம்.எல்.ஏ., குணசேகரன் நேற்று திறந்து வைத்தார். 'நமக்கு நாமே' திட்டம் மூலம், இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பீட்டு தொகையில், மூன்றில் ஒரு பங்கு தொகையை செலுத்தினால் மீதியை அரசே ஏற்றுக்கொள்ளும்.இதற்கு எம்.எல்.ஏ., குணசேகரன், 'அம்மா டிரஸ்ட்' மூலம், 40 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.'இக்கலையரங்கம் தேர்வு சமயங்களில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கும், தேர்வுகள் நடத்துவதற்கும், உதவியாக இருக்கும்' என, தலைமை ஆசிரியர் பழனிசாமி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE