பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் வசம், '2ஜிபி' டேட்டா 'படிப்புக்காக பயன்படுத்துங்க': 'படிப்புக்காக பயன்படுத்துங்க' என அறிவுரை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:கல்லுாரி மாணவர்களுக்கு, விலையில்லா 'டேட்டா கார்டு' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, இதற்கான விழா நடந்தது. சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டத்தில், அரசு கல்லுாரியில் பயிலும், 13 ஆயிரத்து, 673 பேர்; தொழிற்கல்வி, பொறியியல் பயிலும், 2,473 பேர் என, 16 ஆயிரத்து, 146 பேர் இத்திட்டத்தில்
 மாணவர் வசம், '2ஜிபி' டேட்டா 'படிப்புக்காக பயன்படுத்துங்க': 'படிப்புக்காக பயன்படுத்துங்க' என அறிவுரை

திருப்பூர்:கல்லுாரி மாணவர்களுக்கு, விலையில்லா 'டேட்டா கார்டு' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, இதற்கான விழா நடந்தது. சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டத்தில், அரசு கல்லுாரியில் பயிலும், 13 ஆயிரத்து, 673 பேர்; தொழிற்கல்வி, பொறியியல் பயிலும், 2,473 பேர் என, 16 ஆயிரத்து, 146 பேர் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.மாணவ, மாணவியருக்கு, 'டேட்டா கார்டு' வழங்கி, கலெக்டர் விஜயகார்த்திகேயன் பேசுகையில், ''தமிழக அரசின் சிறப்பான திட்டத்தால், கிராமப்புற மக்களுக்கு, இலவச இணையதள சேவை கிடைத்துள்ளது.தினமும், 2 'ஜிபி' அளவுக்கு, நான்கு மாதங்களுக்கு இலவசமாக இணையதள வசதி கிடைக்கும். இணையதளத்துக்கு ஒரு எல்லையே இல்லை; கல்வி பயிலும் தேவைக்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X