பொது செய்தி

தமிழ்நாடு

'டாக்டர்' என அழைக்க அனுமதி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில், திருப்பூர் கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு:மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்காக, கடந்த 2009ல் வெளியிடப்பட்ட அரசாணைகள், பிசியோதெரபிஸ்ட்களின் நேரடி மருத்துவ சேவையை பாதிக்கும் வகையில் உள்ளது. பிசியோதெரபிஸ்ட்கள், பெயருக்கு முன், டாக்டர் என்று, பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.டில்லி,
 'டாக்டர்' என அழைக்க அனுமதி

திருப்பூர்:இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில், திருப்பூர் கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு:மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்காக, கடந்த 2009ல் வெளியிடப்பட்ட அரசாணைகள், பிசியோதெரபிஸ்ட்களின் நேரடி மருத்துவ சேவையை பாதிக்கும் வகையில் உள்ளது. பிசியோதெரபிஸ்ட்கள், பெயருக்கு முன், டாக்டர் என்று, பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.டில்லி, மகாராஷ்டிரா, குஜராத்தில், பிசியோதெரபி கவுன்சில் நடைமுறைகளில், 'டாக்டர்' என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசு, முரண்பட்ட இந்த விதியை நீக்கவேண்டும்; 'டாக்டர்' என சேர்த்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும்.கடந்த 2019, மார்ச் மாதம், மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைக்கப்பட்டு, நியமன உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர். இந்த அறிவிப்பு, தமிழக பிசியோதெரபிஸ்ட்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிசியோதெரபி கவுன்சில் அரசாணையை திருத்தம் செய்து, நியாயமான முறையில் நியமன உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X