பல்லடம்:கோவை வரவுள்ள பிரதமர் மோடியை சந்தித்து, விசைத்தறியாளர்கள் கோரிக்கைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளனர்.விசைத்தறியாளர்கள் கூறியதாவது:திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி தொழில் பிரதானமானது. தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தேவையான கட்டமைப்பு வசதிகளை பட்டியலிட்டு, அவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்க, அனைத்து கட்சிகளிடமும் வலியுறுத்தி வருகிறோம்.வரும் 25ம் தேதி பிரதமர் மோடி, கோவை வருகிறார். பிரதமரை சந்தித்து, ரக ஒதுக்கீடு, தடையில்லா இலவச மின்சாரம், மத்திய அரசு பணியாளர் சீருடைக்கான ஆர்டர், பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பிரதமரை சந்திக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான பதில் கிடைக்கவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE