திருப்பூர்;''வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, உரிய காலத்தில், நீதி கிடைக்க, வக்கீல்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று, ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி கூறினார்.திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் கூடுதல் மகிளா கோர்ட், கூடுதல் உரிமையியல் கோர்ட் ஆகிய புதிய கோர்ட்கள் துவக்க விழா நேற்று நடந்தது. சென்னை ஐகோர்ட்டில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி துவக்கிவைத்து பேசுகையில், 'அனைத்து தரப்பு மக்களும் உரிய நீதி பெறும் வகையில் நீதித்துறையை நம்பியுள்ளனர்.வக்கீல்கள் உரிய ஒத்துழைப்பு அளித்து வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து உரிய காலத்தில் நீதி கிடைக்க ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.ஐகோர்ட் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், ஆஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் கோர்ட் கூட்டரங்கில், மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி அல்லி, கலெக்டர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், எஸ்.பி., திஷா மிட்டல், வக்கீல் சங்க நிர்வாகிகள் பழனிசாமி, சுப்ரமணியம், பக்தபிரகலாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதன்மை குற்றவியல் நடுவர் பிரஷ்னேவ் நன்றி கூறினார்.விக்னேஷ்மது, கூடுதல் உரிமையியல் கோர்ட் நீதிபதியாகவும், கார்த்திகேயன், திருப்பூர் கூடுதல் மகிளா கோர்ட் நீதிபதியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டு, வழக்கு விசாரணைகளை துவக்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE