பொது செய்தி

இந்தியா

பதஞ்சலி 'கொரோனில்' மருந்து: அமைச்சருக்கு ஐ.எம்.ஏ., கேள்வி

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனாவுக்காக, பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 'கொரோனில்' மருந்து தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு, இந்திய மருத்துவ சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த ஆண்டு, கொரோனா வைரசுக்காக, 'கொரோனில்' என்ற மருந்தை அறிமுகம் செய்தது. அந்த மருந்தின் அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை, சமீபத்தில், பாபா ராம்தேவ்
பதஞ்சலி, கொரோனில், மருந்து, அமைச்சர், ஐ.எம்.ஏ., கேள்வி, ராம்தேவ்

புதுடில்லி :கொரோனாவுக்காக, பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 'கொரோனில்' மருந்து தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு, இந்திய மருத்துவ சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த ஆண்டு, கொரோனா வைரசுக்காக, 'கொரோனில்' என்ற மருந்தை அறிமுகம் செய்தது. அந்த மருந்தின் அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை, சமீபத்தில், பாபா ராம்தேவ் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும், உடன் இருந்தார். அப்போது பேசிய ராம்தேவ், கொரோனில் மருந்துக்கு, மத்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் அங்கீகாரம் வழங்கி இருப்பதாக தெரிவித்தார். எனினும், 'எந்த பாரம்பரிய மருந்துக்கும் தாங்கள் அனுமதி வழங்கவில்லை' என, உலக சுகாதார அமைப்பு, திட்டவட்டமாக மறுத்தது.

இதையடுத்து, அதற்கு விளக்கம் அளித்த பதஞ்சலி நிறுவனம், உலக சுகாதார அமைப்பு அனுமதி தரவில்லை என்றும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் மட்டுமே ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்தது.இதற்கு கண்டனம் தெரிவித்து, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள நீங்கள், அறிவியல்பூர்வ
மற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை, நாட்டு மக்களுக்காக

அறிமுகம் செய்தது, எந்த வகையில் நியாயம்? அந்த மருந்தை பரிசோதிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட கால அவகாசம் என்ன என்பதை, நீங்கள் கூற வேண்டும்.நாட்டு மக்களுக்கு, சுகாதாரத் துறை அமைச்சரிடம் இருந்து விளக்கம் தேவை. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட அமைச்சரிடம் இருந்து விளக்கத்தைப் பெற, தேசிய மருத்துவ கமிஷனுக்கு, கடிதம்
எழுத உள்ளோம். உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்ததாக கூறிய பொய்யை கேட்டு, இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சிஅடைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
23-பிப்-202120:21:58 IST Report Abuse
Rajas ஒரு டாக்டர் எந்த ஒரு மருந்தையும் விளம்பரப்படுத்த கூடாது என்று IMC விதி இருக்கிறது. சுகாதார துறை அமைச்சர் ஏன் அந்த விழாவில் கலந்து கொண்டார்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
23-பிப்-202120:10:13 IST Report Abuse
Rajas ராம்தேவின் கொரோனில் விழாவிற்கு சென்றது இரண்டு பேர். Health Minister ஹர்ஷவர்தன் and Transport Minister நிதின் கட்காரி. இந்த மருந்து அயூஷ் அமைச்சகம் மற்றும் WHO சான்றிதழ் பெற்றது என்று சொன்னது பிரச்சினையாகி விட்டது. WHO எந்த பாரம்பரிய மருந்தையும் இதுவரை Recognize செய்யவில்லை. ஆனால் ஆயுஷ் அமைச்சகத்தின் CoPP சான்றிதழைப் பெற்றிருக்கிறது ராம்தேவின் கொரோனில். இதனால் இதை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் இது ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தான். (அதை கூட அவர்கள் தான் சொல்கிறார்கள்)
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-பிப்-202120:05:52 IST Report Abuse
sankaseshan நம்முடைய முன்னோர்களின் மதிப்புநமக்கு தெரியவில்லை . இதன்சிறப்பை வெள்ளைக்காரன் சொன்னாகேட்போம் ,மஞ்சள் வேப்பிலை வசம்புமட்டும் பல மூலிகைகளுக்கு மருத்துவகுணம் உண்டு அதன் பெயரை மாற்றிநமக்கே அதை விற்பான் நாம்அதைவாங்குவோம் தமிழனாகொக்கா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X