பொது செய்தி

இந்தியா

மீண்டும் பறக்கும் 'ஜெட்' : பங்கு விலை உயர்வு

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : அடுத்த, 4 - 6 மாதங்களில், 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனம் மீண்டும் விமான சேவையை துவக்க உள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, அதன் பங்கு விலை, 5 சதவீதம் அதிகரித்தது. நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடன் நெருக்கடி காரணமாக, 2019, ஏப்ரலில் விமான சேவையை நிறுத்தியது.நடவடிக்கை : அத்துடன், திவால் சட்டத்தின் கீழ், கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கின. இந்நிறுவனத்தை,

புதுடில்லி : அடுத்த, 4 - 6 மாதங்களில், 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனம் மீண்டும் விமான சேவையை துவக்க உள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, அதன் பங்கு விலை, 5 சதவீதம் அதிகரித்தது.



latest tamil news



நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடன் நெருக்கடி காரணமாக, 2019, ஏப்ரலில் விமான சேவையை நிறுத்தியது.

நடவடிக்கை : அத்துடன், திவால் சட்டத்தின் கீழ், கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கின. இந்நிறுவனத்தை, தொழிலதிபர், முராரி லாலா ஜலான் தலைமையிலான, ஜலான் - கல்ராக் அமைப்பு ஏற்க முன்வந்து உள்ளது. இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நேற்று பரிசீலித்தது. இது குறித்து, முராரி லாலா ஜலான் கூறியதாவது:இந்திய விமான துறைக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும்.


latest tamil news



கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்த பின், அடுத்த, 4 - 6 மாதங்களில், விமான சேவை துவங்கப்படும். அதிகபட்ச வரம்புதுவக்கத்தில், 25 விமான சேவைகள் மேற்கொள்ளப்படும். பின்னர் சேவைகள் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த தகவல் வெளியானதை அடுத்து, நேற்று காலை, மும்பை பங்குச் சந்தையில், ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை, 4.98 சதவீதம் உயர்ந்து, 114.95 ரூபாய் என்ற அதிகபட்ச வரம்பை எட்டியது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-பிப்-202111:24:17 IST Report Abuse
ஆரூர் ரங் ஜெட் காங்கிரசின் பினாமி😖 ஆட்களுடையது பறக்காது
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-பிப்-202105:10:24 IST Report Abuse
தல புராணம் மேலே பறந்தா கீழே இறங்கி வந்தேயாகணும். இந்தா, பங்கு மார்கெட் பறக்குதுன்னு சம்பந்தமே இல்லாத ராணுவ அமைச்சர் நேத்து பினாத்தினார். இன்னிக்கி 1100 புள்ளி சறுக்கியிருக்கு. வாயை எங்கே போயி வெச்சிப்பாரு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X