சென்னை, பிப். 23- சென்னை செங்குன்றத்தில், மாதவரம் தொகுதி தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம் தலைமையில் நடந்தது.
அப்போது, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலர் சேக்முகமது அலி பேசியதாவது: எம்.எல்.ஏ.,வான நீங்கள், இதுவரை தொகுதி பக்கமே வரவில்லை. உங்கள் மீது, மக்கள் அதிருப்தியில் இருப்பதாக, ஆளும் கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். தமிழக அரசு அறிவித்த, ஹஜ் மானியம் உள்ளிட்ட சில சலுகைகளால், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளில், யாருக்கு ஓட்டளிப்பது என்ற குழப்பத்தில், இஸ்லாமியர்கள் உள்ளனர். நீங்கள் தீவிர பிரசாரம் செய்தால் தான், வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர் பேசினார். இதைக்கேட்டதும் ஆடிப்போன எம்.எல்.ஏ., சுதர்சனம், 'நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று, தொகுதி பிரச்னைகள் பற்றி பேசி உள்ளேன்.
தொகுதி மக்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன்' எனக்கூறி சமாளித்தார். இருந்தாலும், கூட்டம் முடிந்ததும் தன் ஆதரவாளர்களிடம், 'ஆரம்பமே வில்லங்கமாக இருக் கிறதே; கூட்டணி கட்சியினர் ஓட்டு போடுவரா. இல்லை, காலை வாரி விடுவரா' என, புலம்பினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE