கூடலுார்:நீலகிரி மாவட்டத்தில், கேரட் கிலோவுக்கு, 35 ரூபாய் வரை குறையாமல் கொள்முதல் செய்யப்பட்டால் மட்டுமே, ஓரளவு லாபம் கிடைக்கும். ஒரு மாதமாக, இதன் விலை, தொடர்ந்து வீழ்ச்சியில் உள்ளது.இதனால், ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும், கடனை திரும்பி செலுத்த முடியாமலும், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நடுவட்டம் பகுதி விவசாயி குமார் கூறுகையில்,''கேரட் நல்ல விளைச்சல் இருந்தும், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக கிலோ, 10 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. பிற காய்கறிகளுக்கு விலை உயர்வு ஏற்பட்டும், கேரட் விலை உயரவில்லை. தொடர் விலை வீழ்ச்சியால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். கேரட்டுக்கு நிரந்தர விலை கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE