கோவை;பிரதமர் மோடி, 25ம் தேதி கோவை வருவதை அடுத்து கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்; பொதுகூட்டம் நடக்கும் மைதானத்தில், 'மினி கன்ட்ரோல் ரூம்' அமைத்து கண்காணிக்கப்படுகிறது.கோவையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி, வரும், 25ம் தேதி மதியம் 3.00 மணியளவில் தனி விமானத்தில் புதுவையில் இருந்து கோவை வருகிறார்.கோவை விமானநிலையத்தில் இருந்து காரில், 'கொடிசியா' அரங்கு சென்று, நிகழ்ச்சியில் பங்கேற்று புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து கொடிசியா அரங்கு அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில்பங்கேற்று பேச உள்ளார்.இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, காரில் விமான நிலையம் செல்பவர், தனி விமானத்தில் டில்லி செல்ல உள்ளார்.பிரதமர் வருகையை முன்னிட்டு கொடிசியா அரங்கு மற்றும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகின்றன. கொடிசியா பகுதியில், 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அமேரேஷ் புஜாரி கோவை வந்துள்ளார். நேற்று காலை கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.போலீஸ் கமிஷனர் சுமித்சரண், எஸ்.பி., அருளரசு,துணை கமிஷனர்கள், கூடுதல் எஸ்.பி.,க்கள் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒத்திகை, மேடை பாதுகாப்பு பணி, பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும், பிரதமர் வருகையின் போது போக்குவரத்துமாற்றம், விமானநிலையம் முதல் கொடிசியா அரங்கு வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார்பிரதமர் வருகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதில் இருந்தும், 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்படுகின்றனர். இவர்கள் இன்று முதல் கோவைக்கு ஒவ்வொரு, 'பேட்ஜாக' வர உள்ளனர். பாதுகாப்பு பணியில், 17 எஸ்.பி.,க்கள், 38 கூடுதல் எஸ்.பி.,க்கள், 48 டி.எஸ்.பி.,க்கள் உள்பட மொத்தம், 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.'மினி கன்ட்ரோல் ரூம்'பிரதமரின் இரு நிகழ்ச்சிகளும், கொடிசியா அரங்கு மற்றும் மைதானத்தில் நடப்பதால் அந்தபகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 'கொடிசியா' செல்லும் நுழைவு பகுதியிலேயே போலீசார், 'மினி கன்ட்ரோல் ரூம்' அமைத்துள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பாதுகாப்பு பணிக்கு வரும் அனைத்து போலீசாரும், 'மினி கன்ட்ரோல் ரூமில்' பதிவு செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE