சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி அருகே, வீட்டின் கதவை உடைத்து, வைரம், தங்க நகைகள் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் திருடப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, நெகமம் அருகேயுள்ள கப்பிணிபாளையத்தை சேர்ந்த விவசாயி ராமராஜ், 61, இவரது மனைவி யமுனா. இருவரும், பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.தோட்ட வேலைக்காக, தென்காசியை சேர்ந்த சந்சிங் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்த்தனர்.

கிணத்துக்கடவு:பொள்ளாச்சி அருகே, வீட்டின் கதவை உடைத்து, வைரம், தங்க நகைகள் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் திருடப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, நெகமம் அருகேயுள்ள கப்பிணிபாளையத்தை சேர்ந்த விவசாயி ராமராஜ், 61, இவரது மனைவி யமுனா. இருவரும், பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.தோட்ட வேலைக்காக, தென்காசியை சேர்ந்த சந்சிங் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் வெளியூர் சென்றனர்.அதன்பின், இரவு அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைத்து திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டினுள், பீரோ உடைக்கப்பட்டு, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம், தங்க நகைகள்; மூன்று லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.ராமராஜ் நெகமம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளை கும்பலை தேடுகின்றனர்.போலீசார் கூறுகையில், 'தோட்டத்தில் வேலை செய்த சந்சிங், ராமராஜ்க்கு மொபைல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டுக்கு எப்போது வருவீர்கள் என்ற விபரத்தை கேட்டுள்ளார். தற்போது அவரை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்பதாலும், எப்போது திரும்ப வருவார்கள் என்பதையும் தெரிந்து கொண்டு, வீட்டின் கதவு, பீரோவை உடைத்து, வைரம், தங்கநகைகள் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் பணம் திருடியுள்ளார் என்பது தெரிகிறது. வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த, ஸ்கூட்டரையும் திருடிச்சென்றுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு, 10 லட்சம் ரூபாய்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X