'கிங் மேக்கர்' மூப்பனார் துவக்கிய, த.மா.கா., தேர்தல் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது. அவரது மகன் வாசன், அத்தகைய அதிசயத்தை இதுவரை நிகழ்த்தவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில், விஜயகாந்த் தலைமையிலான, மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்ற, த.மா.கா., 26 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றில் கூட வெல்லவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., தஞ்சையில் போட்டியிட்டது; ஆனால், தோல்வி தான், 'பரிசாக' கிடைத்தது. மற்ற அரசியல் தலைவர்களைப் போல், படபடப்பாக, அதிரடியாக, ஆவேசமாக பேச, வாசனுக்கு தெரியாது. நிதானமே, அவரது பலமும், பலவீனமுமாக இருக்கிறது. இதனால்தான், பிரதமர் மோடி உட்பட தேசிய தலை வர்களுக்கு, இன்றும், அவர் மீது மரியாதை உண்டு.
இருப்பினும், பல தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற எதிர் பார்ப்பு, த.மா.கா.,வினருக்கு இல்லாமல் இருக்குமா? ஆனால், 'சைக்கிள்' இன்னும் வேகம் பிடிக்காமல், தள்ளுவண்டியாகவே உள்ளது.தேர்தலுக்கு ஒரு சின்னம் வாங்கி, எவ்வளவு நாள் தான் போட்டியிடுவது? இந்த முறை குறைந்தபட்சம், 12 தொகுதிகளாவது தேவை என த.மா.கா., 'முறுக்கு' காட்டினாலும், அ.தி.மு.க., மனசு வைத்தால் தான் உண்டு.
இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா கூறுகையில், ''அ.தி.மு.க., கூட்டணி யில், சிறுபான்மை ஓட்டுகளை பெறும் தகுதி த.மா.கா.,வுக்கு உள்ளது. எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை தாருங்கள் என, கூட்டணி தலைமையிடம் கேட்டு, வலியுறுத்தி பெறுவோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE