தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, ஆந்திராவைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பல்லம் ராஜு, மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதின் ராவுத் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
கருணாநிதி இருந்தபோது, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்தவர், மொய்லி. கூட்டணி பேச்சில் கில்லாடி. கருணாநிதியிடமே சாமர்த்தியமாக பேரம் பேசி, காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை பெற்ற வித்தைக்காரர்.
சீனியர்கள் கருத்து
அப்பேர்ப்பட்டவரை, ஸ்டாலினுடன் பேசவிட்டால், அதிக தொகுதிகளை அதுவும் சாதகமானதை தட்டிக் கண்டு போய்விடுவார்; கருணாநிதி குடும்பத்தினரால் மொய்லியின் வேண்டுகோளை தட்ட முடியாது என, தி.மு.க., சீனியர்கள் கருதுகின்றனர். எனவே, எப்படியாவது மொய்லி வராமல் தடுக்க வேண்டும் என, காய் நகர்த்தினர்.
அந்த முயற்சிக்கு பலன் கிடைத்து விட்டது.
தொகுதி பங்கீடு பேச்சு குழுவில், அவருக்கு பதிலாக, ரஞ்சித் சிங் சுர்ஜிவாலாவை நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, இன்று இரவு சென்னை வருகிறார். அவரது தலைமையில், ரஞ்சித் சிங், தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர், நாளை காலை அறிவாலயம் செல்கின்றனர்.
![]()
|
கூடுதலாக 10 சீட்
பொதுச்செயலர் துரைமுருகன் தலைமையிலான குழுவுடன் பேசுகின்றனர். தமிழக காங்கிரஸ், 30 தொகுதிகள் கேட்டு, வேட்பாளர் விபரங்களுடன் பட்டியல் தயாரித்துள்ளது.தி.மு.க., தரப்பில், 21 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் தருவதாக, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி., தருவதாக சொல்வதை எல்லாம், நம்ப முடியாது; தராமல் போன அனுபவம் இருப்பதாக, தங்கபாலு போன்றோர் சொல்கின்றனர். அதுக்கு பதிலாக, 10 'சீட்' கூடுதலாக கேட்கிறது காங்கிரஸ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE