லண்டன்: பிரிட்டனில் 'கோக்கோ கோலா' பாட்டிலில் சிறுநீர் நிரப்பி அனுப்பப்பட்டதற்கு வாடிக்கையாளரிடம் 'ஹெலோ பிரெஷ்' நிறுவனம் மன்னிப்பு கோரியது.
பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஆலிவர் மெக்மானஸ் என்ற இளைஞர் உணவு தயாரித்து 'ஆன்லைன்' வாயிலாக வினியோகம் செய்யும் ஹெலோ பிரெஷ் நிறுவனத்திடம் மதிய உணவுக்கு நேற்று முன்தினம் 'ஆர்டர்' செய்திருந்தார்.எனினும் அந்த உணவுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 'கோக்கோ கோலா' பாட்டிலை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் சிறுநீர் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆத்திரமடைந்த அந்த இளைஞர் இந்த விஷயத்தை 'டுவிட்டர்' வாயிலாக பதிவிட்டு ஹெலோ பிரெஷ் நிறுவனத்தையும் அவர் 'டேக்' செய்திருந்தார்.அந்த பதிவை பார்த்த மக்கள் ஹெலோ பிரெஷ் நிறுவனத்தையும் அதன் சேவையையும் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர்.இதையடுத்து ஹெலோ பிரெஷ் நிறுவனம் இந்த சம்பவத்திற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE