சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கவுன்சிலர் தலை துண்டித்து கொலை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
திருவாரூர் : அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், தலை துண்டித்து, படுகொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, கோவிலுாரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 38. இவர், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஆலங்காடு பகுதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், முத்துப்பேட்டையில்

திருவாரூர் : அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், தலை துண்டித்து, படுகொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, கோவிலுாரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 38. இவர், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஆலங்காடு பகுதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், முத்துப்பேட்டையில் நடந்த, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ளார். நேற்று காலை, 7:00 மணிக்கு, ராஜேஷ், இரு சக்கர வாகனத்தில், முத்துப்பேட்டை சென்று, கோவிலுாருக்கு வந்து கொண்டிருந்தார்.

ஆலங்காடு அருகே, அவரை பின் தொடர்ந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், ராஜேஷை, அரிவாளால், சரமாரியாக வெட்டினர். பின், அவரது தலையை துண்டித்து, ஆசாத் நகர் என்ற இடத்தில் போட்டு, தப்பிச் சென்றனர். ராஜேஷூக்கு, 28 வயதில் மனைவியும், எட்டு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலையையும், உடலையும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக, கொலை நடந்ததா என்பது குறித்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X