பொது செய்தி

தமிழ்நாடு

அருந்ததியர் சமூக எம்.பி.,க்கு 'கவுரவம்'

Added : பிப் 23, 2021
Share
Advertisement
ஈரோடு, பிப். 23-ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மக்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதற்கு முன் நிகழ்ச்சி நடந்த அனைத்து ஊர்களிலும், மேடையின் ஒரு மூலையில், அந்தந்த மாவட்டச் செயலரை, சாதாரண சேரில் அமர வைப்பர். மேடையிலும், மேடைக்கு கீழேயும் யாரையும் நிற்க, அமர வைப்பதில்லை. நேற்றைய கூட்டம் துவங்கும் முன், மேடைக்கு கீழ், 'ஐபேக்' டீமால், தி.மு.க.,

ஈரோடு, பிப். 23-ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மக்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதற்கு முன் நிகழ்ச்சி நடந்த அனைத்து ஊர்களிலும், மேடையின் ஒரு மூலையில், அந்தந்த மாவட்டச் செயலரை, சாதாரண சேரில் அமர வைப்பர். மேடையிலும், மேடைக்கு கீழேயும் யாரையும் நிற்க, அமர வைப்பதில்லை.

நேற்றைய கூட்டம் துவங்கும் முன், மேடைக்கு கீழ், 'ஐபேக்' டீமால், தி.மு.க., துணை பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான செல்வராஜை தனியாக நிற்க வைத்தனர். ஸ்டாலின் மேடைக்கு வந்தபின், சேர் வழங்கி, தனியாக அமர வைக்கப்பட்டார்.மேடையில் ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, திடீரென அருந்ததியினர் மீது பாசம் வந்து, பொல்லானுக்கு சிலை, மணி மண்டபம் அமைப்பதாக தேர்தலுக்காக அறிவித்துள்ளார். கடந்த, 2019 பிப்., 9ல் சங்ககிரியில் நடந்த ஆதித்தமிழர் மாநாட்டில், 'பொல்லானுக்கு சிலை, மணி மண்டபம் அமைத்து, அரசு மூலம் விழா எடுக்கப்படும்' என, நான் அறிவித்தேன். அதைத்தான் முதல்வர் அறிவித்துள்ளார்.

கடந்த, 2008 ஜன., 23ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அரசில், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2009 பிப்., 24ல் துணை முதல்வரான நான், அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை சட்டசபையில் தாக்கல் செய்து, இரண்டு வாரத்தில் அரசாணை வெளியிட்டேன். இதை, பெருமையுடன் தெரிவிக்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.ஸ்டாலின் பேசிய பிறகே, அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜுக்கு, துணை பொதுச் செயலர், ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்துள்ளோம், என்பதை தெரிவிக்கும் விதமாக, அவரை மேடையின் கீழ் அமர வைத்துள்ளனர் என்பதை, கூட்டத்தினர் அறிந்தனர்.அதே நேரம், 'இடஒதுக்கீடு கொடுத்த ஸ்டாலின், அவருக்கு மேடையிலும் இடம் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து, மேடையின் கீழே, அவரை அமர வைத்து, அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம்' என, தி.மு.க.,வினர் சிலரே ஆதங்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X