அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று பட்ஜெட் தாக்கல் மீண்டும் கவர்ச்சி அறிவிப்பு?

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசின், 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார். பொதுத்தேர்தல் வர உள்ளதால், பட்ஜெட்டிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம், இன்று துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 -
இன்று பட்ஜெட் தாக்கல் மீண்டும் கவர்ச்சி அறிவிப்பு?


சென்னை : தமிழக அரசின், 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார். பொதுத்தேர்தல் வர உள்ளதால், பட்ஜெட்டிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டம், இன்று துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராக, 11வது முறையாக, இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
அ.தி.மு.க., அரசின் பதவிக்காலம், மே, 24ல் நிறைவடைவதால், இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், சட்டசபை தேர்தல் வருவதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



பட்ஜெட் கூட்டத்தொடர், எத்தனை நாள் நடக்கும் என்பது, இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடக்கும், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவாகும்.

இந்த கூட்டத் தொடரில், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், 110 விதியின் கீழ், ஏராளமான புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட உள்ளார்.

கடந்த சட்டசபை கூட்டத் தொடரை, தி.மு.க., கூட்டணி முழுமையாக புறக்கணித்தது. இந்த கூட்டத்தொடரில், தி.மு.க., கூட்டணி கட்சிகள், முழுமையாக பங்கேற்குமா என்பதும், இன்று தெரியும்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hm Join - Chennai,இந்தியா
23-பிப்-202110:01:24 IST Report Abuse
Hm Join பாப்போம் ரிசல்ட் எப்படி வருதுன்னு...
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
23-பிப்-202107:59:28 IST Report Abuse
Elango என்ன அறிவித்தாலும் சின்னாமாவை சுற்றி தான் இந்த மீடியா எல்லாம் நாளை இருக்கப் போகிறார்கள்
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
23-பிப்-202107:57:42 IST Report Abuse
siriyaar எப்படியோ திமுக தோற்றால் அடுத்த 5 வருஷம் நகரம் இல்லை அவ்வளவுதான் அதற்கு எதை செய்தால் என்ன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X