அமித் ஷா மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (25) | |
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், அமித் ஷாவுக்கு எதிரான அவதுாறு வழக்கு, பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு, மாற்றப்பட்டது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அவதுாறுஇங்கு, மம்தாவின் உறவினரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி, எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், அமித் ஷாவுக்கு எதிரான அவதுாறு வழக்கு, பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு, மாற்றப்பட்டது.latest tamil newsமேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அவதுாறுஇங்கு, மம்தாவின் உறவினரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி, எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.கடந்த, 2018ல், கோல்கட்டாவில் நடந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, தன்னை மிகவும் தரக்குறைவாக விமர்சித்ததாக, அந்த மனுவில் அபிஷேக் தரப்பில் கூறப்பட்டிருந்தது.


latest tamil newsசம்மன் : -
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அமித் ஷாவுக்கு, 'சம்மன்' அனுப்பியது. அதன் அடிப்படையில், அமித் ஷா சார்பில், நேற்று ஆஜரான அவரது வழக்கறிஞர் பிரஜேஷ் ஜா கூறுகையில், “மனுவில், அமித் ஷாவின் முகவரி தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கோல்கட்டாவில் உள்ள பா.ஜ., அலுவலகத்தின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றார். இதன்பின், அபிஷேக் பானர்ஜியின் வழக்கறிஞர் சஞ்சய் பாசு கூறுகையில்,“அமித் ஷாவின், டில்லி மற்றும் ஆமதாபாதில் உள்ள இரண்டு முகவரிகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன,” என்றார்.


latest tamil newsஅதிகார வரம்பு : -
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி, 'இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது. எனவே, இந்த வழக்கு, கோல்கட்டாவில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது' என, உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202114:02:26 IST Report Abuse
Malick Raja நீதியை பாதியாக்கி நீதிபதிக்கு கவர்னர் பதவி .. வாரியங்கள் தலைவர் பதவிகள் .. சொல்வதை சொல்பவர்களுக்கு மட்டுமே .. என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது .. நல்ல அரசாங்கம் ...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-பிப்-202117:18:37 IST Report Abuse
J.V. Iyer வேண்டாத வேலை. இவர்களுக்கு நேரம் சரியில்லை. என்ன செய்வது?
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
23-பிப்-202116:38:55 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN என்னங்க இது நம் மாண்பமை பாரத பிரதமரை பல கயவர்கள் எப்படி எல்லாம் மரியாதை குறைவாக பேசுகிறார்கள் அம்மாமனிதர் மலைபோல் மௌனமாக தன்பணியை தளரவிடாமல் செவ்வனே செய்துவருகிறார். அவதூராக பேசும் அய்யோக்கியர்களை பற்றிநினைப்பதே இல்லை அவர்கேஸ் என்று தொடுத்தால் ...பொதுசேவைக்கு வந்தால் ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கும் அன்பாக செயல்படுவதே கடமை எனஎண்ணி பெருந்தன்மையோடு உள்ளார்பாருங்கள். மம்தா அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல போங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X