மாநில தடகள போட்டி: வென்றவர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாநில தடகள போட்டி: வென்றவர்களுக்கு பாராட்டு

Added : பிப் 23, 2021
Share
புதுச்சேரி; வீராம்பட்டினம் ஸ்டார் தடகள விளையாட்டு சங்கம் சார்பில் மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரியில் நடந்த மாநில தடகள போட்டியில் வீராம்பட்டினம் தடகள விளையாட்டு சங்க மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

புதுச்சேரி; வீராம்பட்டினம் ஸ்டார் தடகள விளையாட்டு சங்கம் சார்பில் மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரியில் நடந்த மாநில தடகள போட்டியில் வீராம்பட்டினம் தடகள விளையாட்டு சங்க மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா வீராம்பட்டினத்தில் நடந்தது.தொழிலதிபர்கள் பிரேம் நாதன், சார்லஸ் டேனியல் பங்கேற்று, சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். சங்கம் சார்பில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர், பயிற்சி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X