சிறப்பு பஸ் இயக்காததால் மாணவர்கள் பாதிப்பு

Added : பிப் 23, 2021
Share
Advertisement
காரைக்கால்; காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டும் அரசு சிறப்பு பஸ்கள் இயக்காததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.காரைக்கால் மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி, சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு பஸ் சேவை தொடங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கொரோனா தொற்று

காரைக்கால்; காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டும் அரசு சிறப்பு பஸ்கள் இயக்காததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.காரைக்கால் மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி, சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு பஸ் சேவை தொடங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைந்து வருவதால், தற்போது பிளஸ் 2 வரை வகுப்புகள் நடந்து வருகின்றன.பள்ளிகள் திறந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க வில்லை. இதனால் மாணவர்கள் தனியார் பஸ்களில் அதிக செலவு செய்து பல மணி நேரம் காத்திருந்து பள்ளிக்கு தாமதமாக செல்கின்றனர். மாணவர்கள் நலன் கருதி மீண்டும் சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X