புதுச்சேரி; புதுச்சேரியில் வரலாறு காணாத ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது என கம்யூ.,கட்சிகள் கண் டனம் தெரிவித்துள்ளன.இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:காங்., - தி.மு.க., கட்சி எம்.எல்.ஏ.,க்களை வருமான வரித்துறை, சி.பி.ஐ., ஆகியவற்றை காட்டி மிரட்டி கட்சித் தாவல், ராஜினாமா நாடகம் அரங்கேற்றி, ஜனநாயக படுகொலை செய்துள்ளனர்.நியமன எம்.எல்.ஏ.,க் களை நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க செய்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை சீரழித்து விட்டனர்.ஒட்டு மொத்தமாக புதுச்சேரி மக்கள் மீது பா.ஜ., கட்சி பாசிச கோரதாண்டவம் ஆடியிருக்கிறது. புதுச்சேரி மக்கள் பா.ஜ., கட்சியின் வகுப்புவாத அரசியலை எப்போதும் நிராகரித்துள்ளனர்.புதுச்சேரி மண்ணின் உரிமைகளை மீட்கவும், தனித் தன்மையை பாதுகாக்க மக்கள் விழிப்புடன் இருந்து ஆதரவு தரவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.மா.கம்யூ., பிரதேச செயலாளர் ராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கை:காங்., - திமுக கூட்டணி அரசை நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட விடாமல் கிரண்பேடி மூலம் பா.ஜ., தடுத்தது. காங்., எம்.எல்.ஏ.,க் களை விலைக்கு வாங்கி நாராயணசாமி தலைமையிலான காங்., - தி.மு.க., கூட்டணி அரசை கவிழ்த்துள்ளது.இத்தகைய ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளை சட்டசபை பொதுத் தேர்தலில் புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE