முதல்வர், அமைச்சர் அலுவலகத்தில் ரகசிய கோப்புகள் கிழித்து அழிப்பு

Added : பிப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரி சட்டசபையில் முதல்வர், அமைச்சர் அலுவலகத்தில் இருந்த சில ரகசிய கோப்புகள் கிழித்து அழிக்கப்பட்டன. சில கோப்புகளை அமைச்சர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.புதுச்சேரி அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் நேற்று சட்டசபையில் தோல்வி அடைந்தது. அடுத்த சில நிமிடத்தில், முதல்வர் நாராயணசாமி, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்து, ராஜினாமா கடிதம்

புதுச்சேரி; புதுச்சேரி சட்டசபையில் முதல்வர், அமைச்சர் அலுவலகத்தில் இருந்த சில ரகசிய கோப்புகள் கிழித்து அழிக்கப்பட்டன. சில கோப்புகளை அமைச்சர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.புதுச்சேரி அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் நேற்று சட்டசபையில் தோல்வி அடைந்தது. அடுத்த சில நிமிடத்தில், முதல்வர் நாராயணசாமி, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்து, ராஜினாமா கடிதம் கொடுத்து சொந்த வாகனங்களில் வீட்டிற்குச் சென்றனர்.சட்டசபையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகத்தில் இருந்த சில முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்களை அலுவலக ஊழியர்கள் மூட்டை கட்டி அமைச்சர்களின் வீடுகளுக்கு அனுப்பினர்.சில ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து வைத்து கொண்டனர். சில ரகசிய ஆவணங்களை சட்டசபை ஊழியர்கள் கிழித்து அழித்தனர்.முதல்வர் மற்றும் அமைச்சர் அலுவலகத்தில் டெபுடேஷன் முறையில் பணி புரிந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களும், அரசு துறைகளில் கையெழுத்திட்டு, சட்டசபையில் வலம் வந்தவர்களும் நேற்று மதியத்திற்கு பிறகு மாயமாகினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X