நாராயணசாமி பேச்சு அநாகரீகமானது: அன்பழகன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு | Dinamalar

நாராயணசாமி பேச்சு அநாகரீகமானது: அன்பழகன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021
Share
புதுச்சேரி; சட்டசபையில் நாராயணசாமி பேசியது அநாகரீகமானது என அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.அவர் அளித்த பேட்டி:2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஆட்சி என்ற ஆயுதத்தை காங்., தி.மு.க. கூட்டணியிடம் மக்கள் கொடுத்தனர். எந்த அரசாக இருந்தாலும் தேர்தல் அறிக்கை, பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டியது கடமை.காங்., கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பஞ்சாலை

புதுச்சேரி; சட்டசபையில் நாராயணசாமி பேசியது அநாகரீகமானது என அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.அவர் அளித்த பேட்டி:2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஆட்சி என்ற ஆயுதத்தை காங்., தி.மு.க. கூட்டணியிடம் மக்கள் கொடுத்தனர்.

எந்த அரசாக இருந்தாலும் தேர்தல் அறிக்கை, பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டியது கடமை.காங்., கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பஞ்சாலை நவீனப்படுத்துவேன் என கூறி பஞ்சாலை, கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடினார். வீட்டிற்கு ஒருவருக்கு வேலை என கூறி, ஒருவருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. அரசு துறையில் காலியாக உள்ள 9568 பணியிடங்கள் நிரப்பவில்லை.சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு பெரிய அதிகாரம் இல்லை. உள்ளங்கையில் மூடி வைத்து ஆட்சி செய்ய வேண்டும். முன்பு இருந்த ரங்கசாமியும் அப்படி தான் ஆட்சி செய்து, மக்களுக்கு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தினார்.நாராயணசாமி ஆட்சியில் அமர்ந்தவுடனே, கவர்னர், மத்திய அரசுடன் மோதல் போக்கு, மலிவு விளம்பரத்தில் நாட்டம் கொண்டு, மாநில வளர்ச்சியை 10 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளி விட்டார்.காங்., கூட்டணி அரசு சரியில்லாததை கண்டித்து 7 பேர் வெளியே சென்றனர். தனது மெஜாரிட்டி நிருப்பிக்க வேண்டியது நாராயணசாமியின் கடமை. ஆனால், சட்டசபையில் பல குற்றச்சாட்டுகள் கூறினார்.எங்களுக்கும், எதிர்கட்சி தலைவருக்கும் சபாநாயகர் பேச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுரிமை இல்லை என சபையில் ஒருவர் கூறுவது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு நேர்மாறானது. நியமன எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டு அளிக்க 94வது பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.ஆனால், நாராயணசாமி பேசிவிட்டு புறமுதுகிட்டு வெளியே செல்கிறார். அவையில், அரசியல் விபசாரம் செய்கிறார்கள் என பேசியது அறுவருக்க தக்கது. பெண் குலத்தை இழிவுப்படுத்தும் செயல். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதனை ஏற்றுக் கொள்கிறாரா.நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் முழுமையாக தோல்வி அடைந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கட்சியின் தலைமையை கேட்டு முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X