புதுச்சேரி; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரி மக்களின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:புதுச்சேரி வரலாற்றின் மிக மோசமான அத்தியாயம் இன்று மூடப்பட்டுள்ளது. நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு ராஜினாமா செய்ததால் புதுச்சேரியின் மோசமான நிலை மாறப் போகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மாநில நிதி சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக அனைத்து துறைகளுக்கும் மத்தியில் இருந்து அனுப்பிய நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.மக்கள் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் வழிவகுக்கவில்லை. வரும் தேர்தல்களில் அவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.புதுச்சேரிக்கு ஒரு புதிய சகாப்தம், புதிய அரசு, பொது சேவையின் புதிய கலாசாரம், புதிய பார்வை மற்றும் தலைமை தேவை. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் திட்டத்தில் புதுச்சேரிக்கு மீன்பிடி மையங்கள், ஜவுளி பூங்காக்கள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டங்களையும் பிரதமர் மோடி அளித்துள்ளார். வரும் தேர்தலில் என்.ஆர்., காங்., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரி மக்களின் எதிர்காலம் சிறந்ததாக அமையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE