புதுச்சேரி; எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன், வெங்கடேசன் ஆகியோருக்கு கட்சியில் இருந்து கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்., கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் பார்லிமெண்ட் செயலாளராக இருந்த லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., காங்., கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தனது பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து விட் டதால் காங்., கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.சஸ்பெண்ட்எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த வெங்க டேசன் தி.மு.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய் யப்பட்டுள்ளதாக அக்கட்சி மாநில பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில், புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடேசன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், தி.மு.க.,விற்கு அவப் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார், என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE