புதுச்சேரி; நவரை போகத்திற்கு தேவையான நெல் ரகங்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என கூடுதல் வேளாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.தட்டஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒருங்கிணைந்த சான்று விதை உற்பத்தி திட்டத்தில் நவரை பருவத்திற்கு தேவையான நெல் ரக சான்று விதைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவரை போகத்திற்கு ஏ.டி.டி.,-37, ஏ.எஸ்.டி.,-16, கோ ஆர்-51 நெல் ரகங்களை மானிய விலையில் பாப்ஸ்கோ மூலம் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.உழவர் உதவியகங்களை விவசாயிகள் அணுகி, சாகுபடி செய்ய உள்ள நில அளவிற்கு பரிந்துரைக்கும் நவரை நெல் விதைகளை மானிய விலைக்கான சான்று பெற்று, பாப்ஸ்கோ விற்பனை மையங்களில் பெற வேண்டும்.நெல் விதைகள் வாங்கிய விற்பனை ரசீதை நவரை நெல் உற்பத்தி ஊக்கத் தொகை கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 15ம் தேதிக்குள் உழவர் உதவியக அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE