புதுச்சேரி; மத்திய அரசை கண்டித்து மகிளா காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சட்டசபை அருகே நடந்த போராட்டத்திற்கு மகிளா காங்., மாநில தலைவி பிரேம் பஞ்சகாந்தி தலைமை தாங்கினார்.போராட்டத்தில் விஜயகுமாரி, தமிழரசி, அஞ்சாலாட்சி, ஜெயலட்சுமி, வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நியமன எம்.எல்.ஏ., களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். காங்., கட்சியில் இத்தனை ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ராஜினமா செய்த காங்., எம்.எல்.ஏக்கள் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE