அரசியல் விலகல் முடிவை கைவிட கோரிக்கை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
பாகூர்; அரசியலில் இருந்து விலகல் என்ற முடிவை முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் கைவிட வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.என்.ஆர். காங்., முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும், தனது முடிவுக்கு ஆதரவாளர்களும், தொகுதி மக்களும் மதிப்பு அளிக்க வேண்டும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு, அவரது ஆதரவாளர்கள்

பாகூர்; அரசியலில் இருந்து விலகல் என்ற முடிவை முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் கைவிட வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.என்.ஆர். காங்., முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும், தனது முடிவுக்கு ஆதரவாளர்களும், தொகுதி மக்களும் மதிப்பு அளிக்க வேண்டும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று மாலை பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் அவரது வீட்டில் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடினர்.அங்கிருந்த ராதாகிருஷ்ணனின் சகோதரர் செந்தில்குமாரை சந்தித்து பேசினர். அப்போது, ''பாகூர் தொகுதி கடந்த 10 ஆண்டு களில் எந்த வளர்ச்சியும் பெறவில்லை, மற்ற தொகுதிகளை காட்டிலும் பின் தங்கியே உள்ளது. எனவே, ராதாகிருஷ்ணன், அரசியல் விலகல் முடிவை பரிசீலனை செய்து, முடிவை கைவிட வேண்டும்.அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பின் தங்கிய பாகூர் தொகுதியையும், மக்களையும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம் என்றனர்.'' அனைத்து கருத்துக்களும், அண்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக செந்தில்குமார் கூறினார். பின், ஆதரவாளர்கள், தொகுதி மக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X