தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது ஜனநாயக படுகொலை: நாராயணசாமி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி; 'மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசை கலைப்பது ஜனநாயக படுகொலை' என, நாராயணசாமி பேசினார்.புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அவர் நேற்று பேசியதாவது:மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியுதவி கிடைக்காதது, கவர்னராக கிரண்பேடியை நியமித்து தினசரி தொல்லை தந்தது, எதிர்கட்சிகளின் ஆட்சி கவிழ்ப்பு வேலைகள் ஆகியவற்றை சமாளித்து ஆட்சியை நடத்தி மக்கள்

புதுச்சேரி; 'மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசை கலைப்பது ஜனநாயக படுகொலை' என, நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அவர் நேற்று பேசியதாவது:மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியுதவி கிடைக்காதது, கவர்னராக கிரண்பேடியை நியமித்து தினசரி தொல்லை தந்தது, எதிர்கட்சிகளின் ஆட்சி கவிழ்ப்பு வேலைகள் ஆகியவற்றை சமாளித்து ஆட்சியை நடத்தி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.இப்போது, ஆட்சி கவிழ்ப்பு அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். மோடியும், கிரண்பேடியும் எங்கள் அதிகாரத்தை படிப்படியாக குறைத்தனர். ஆட்சியை கலைப்பதற்காக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சேர்ந்து முயற்சி செய்தனர்.தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு 41 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், புதுச்சேரிக்கு 20 சதவீத மானியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இது, புதுச்சேரியை வஞ்சிப்பதாகும்.ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் ஒதுக்கீட்டு தொகையை 10ல் இருந்து 20 சதவீதம் வரை உயர்த்தி தருவதுதான் விதி. ஆனால், 2 சதவீதம் மட்டுமே மத்திய அரசு உயர்த்தி தந்துள்ளது.மோடி அரசு புதுச்சேரியை புறக்கணிக்கிறது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 15வது நிதிக் கமிஷனில் சேர்த்துள்ளனர். ஆனால், சட்டசபை உள்ள புதுச்சேரியை சேர்க்கவில்லை.அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கிரண்பேடிக்கு அனுப்பினோம். இந்த முடிவை, மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.அனைவருக்கும் 20 கிலோ அரிசி வழங்குவதற்கு முடிவு செய்து நிதி ஒதுக்கீடு செய்தோம். அரிசியாக தர வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்காமல், பணமாக வழங்க வேண்டும் என கிரண்பேடி கூறினார். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை புறக்கணிக்கின்றனர். இது, மக்களை வஞ்சிப்பது இல்லையா? பக்கத்து மாநிலங்களில் அரிசியாக வழங்குகின்றனர். புதுச்சேரி மட்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள் இரண்டாம் தர பிரஜையா? இதற்கு எதிர்கட்சியினர் குரல் கொடுக்கவில்லை.யாரும் எந்த பதவியிலும் நிரந்தரமாக இருக்க முடியாது; சிவலோக பதவியே நிரந்தரம். பஞ்சோந்தியாக இருக்க கூடாது; கொள்கை பிடிப்போடு இருக்க வேண்டும். இருக்கின்ற இயக்கத்தின் பெருமைகளை காக்க வேண்டும். கட்சி தலைமை மீது விசுவாசமாக இருக்க வேண்டும்.மத்தியில் உள்ள அரசு எதற்கெடுத்தாலும் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., ஆகியவற்றை அனுப்பி மிரட்டுகிறது. நம்மிடம் நிறைய பயந்தாங்கொள்ளிகள் உள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு சென்று விட்டனர். அவர்கள் இனிமேல் மனிதர்களாக உலவ முடியுமா? காசுக்கு விலை போய் விட்டார் என மக்கள் பேசுவார்களே... யாரையும் மிரட்டலாம், கட்சி மாற வைக்கலாம் என நினைக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க நடக்கும் முயற்சிக்கு எதிர்கட்சிகள் உடந்தையாக உள்ளன. அருணாசல பிரதேசம், மணிப்பூர், கோவா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது என்பது ஜனநாயக படுகொலை இல்லையா? தேர்தல் அறிவிப்பிற்கு 10 நாட்களே இருக்கும்போது கலைக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு சிலர் உறுதுணையாக இருக்கிறார்கள். இது, அரசியல் விப சாரம். இதை, ஜனநாயக நாட்டில் ஏற்க முடியாது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X