பலாசோர்:உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை, நேற்று, இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வான்வழியாக நடத்தப்படும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க, வி.எல்., - எஸ்.ஆர்.எஸ்.ஏ.எம்., எனப்படும், குறுகிய இலக்கு தகர்ப்பு ஏவுகணையை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ளது. இந்திய கடற்படைக்காக, இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த ஏவுகணை, ஒடிசாவின் பலாசோர் மாவட்ட கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஏவு தளத்தில் இருந்து, நேற்று பரிசோதிக்கப்பட்டது. இரண்டு முறை செய்யப்பட்ட பரிசோதனைகளும், வெற்றிகரமாக அமைந்ததாக, டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE