சிதம்பரம்: கலைமாமணி விருது பெற்ற ஆச்சாள்புரம் சின்னதம்பி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாதஸ்வரம் வாசித்து வழிபட்டது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம், ஆச்சாள்புரத்தை சேர்ந்தவர் நாதஸ்வர கலைஞர் சின்னத்தம்பி. இவர் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு ஆஸ்தான நாதஸ்வர வித்வானாக பணியாற்றியவர். கடந்த 45 ஆண்டு காலமாக இப்பணியை செய்து வருகிறார். தமிழக அரசின் சார்பில் இவருக்கு, கடந்த 20ம் தேதி கலைமாமணி விருதை முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார். விருதைப் பெற்ற சின்னத்தம்பி, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று வந்தார்.நடராஜர் பாதத்தில் விருதை சமர்ப்பித்து வணங்கினார். அப்போது, 'சபாபதிக்கு வேறு தெய்வம் ஈடு இணையாக உண்டோ' என 93 வயதிலும் நாதஸ்வரத்தில் வாசித்து வழிபட்டார். இரண்டு நாதஸ்வர பாடல்களை அருமையாக வாசித்த போது பக்தர்கள் மெய்மறந்து ரசித்தனர்.கோவிலுக்கு வந்த அவரை, தீட்சிதர்கள் சார்பில் ஐயப்பன் தீட்சிதர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் அவருக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE