பொது செய்தி

இந்தியா

ஆயிரக்கணக்கான சீட்டுகள் காலி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில், பொறியியல் படிப்புகளுக்கு, ஆண்டு தோறும், 'டிமாண்ட்' குறைந்து வருவதால், ஆயிரக்கணக்கான சீட்டுகள் காலியாக உள்ளன.கர்நாடகாவில், 230 பொறியியல் கல்லுாரிகள்; 11 அரசு பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வாணையம், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள, அரசு கோட்டா சீட்களை நிரப்பும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், 2,000 சீட்கள் கூடுதலாக

பெங்களூரு: கர்நாடகாவில், பொறியியல் படிப்புகளுக்கு, ஆண்டு தோறும், 'டிமாண்ட்' குறைந்து வருவதால், ஆயிரக்கணக்கான சீட்டுகள் காலியாக உள்ளன.கர்நாடகாவில், 230 பொறியியல் கல்லுாரிகள்; 11 அரசு பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வாணையம், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள, அரசு கோட்டா சீட்களை நிரப்பும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், 2,000 சீட்கள் கூடுதலாக மிச்சமாகியுள்ளது.தொடர்ந்து நான்காவது சுற்றில், சீட்கள் வழங்கப்பட்ட பிறகும், அதிக சீட்கள் மிச்சமானதால், கல்லுாரி நிர்வாகங்கள் வருத்தமடைந்துள்ளன.கடந்தாண்டு, 21 ஆயிரத்து, 360 சீட்கள் காலியாக இருந்தன. இம்முறை, 2,440 சீட்கள் கூடுதலாக மிச்சமாகியுள்ளது. மாநிலத்தின் அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அனைத்து சீட்களும் நிரம்பியுள்ளன.இம்முறை, 6,872 மருத்துவ சீட்கள் நிரம்பிவிட்டன. பல் மருத்துவ கல்லுாரிகளில், 2,834 சீட்கள் இருந்தன. இவற்றில், 990 சீட்கள் காலியாக உள்ளது.பி.எஸ்.சி., விவசாயம், கால்நடை மருத்துவ கல்லுாரிகளில், அனைத்து சீட்களும் நிரம்பியுள்ளன. ஆனால், பொறியியல் சீட்களுக்கு, 'டிமாண்ட்' இல்லாததால், ஆயிரக்கணக்கான சீட்கள் மிச்சமாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X