பொது செய்தி

இந்தியா

மின்சார வாகனங்களை, 'சார்ஜிங்' செய்து கொள்ள வசதி ஏற்படுத்துவது கட்டாயம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
பெங்களூரு: ''அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட, பெரிய கட்டடங்களில், மின்சார வாகனங்களை, 'சார்ஜிங்' செய்து கொள்ள வசதி ஏற்படுத்துவது கட்டாயம். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.பெங்களூரில், ஹார்வர்டு இந்தியா கான்பரன்ஸ் சார்பில், 'எதிர்காலத்தில் சிறப்பான போக்குவரத்து' தொடர்பாக, நேற்று நடந்த கருத்தரங்கில், துணை

பெங்களூரு: ''அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட, பெரிய கட்டடங்களில், மின்சார வாகனங்களை, 'சார்ஜிங்' செய்து கொள்ள வசதி ஏற்படுத்துவது கட்டாயம். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.

பெங்களூரில், ஹார்வர்டு இந்தியா கான்பரன்ஸ் சார்பில், 'எதிர்காலத்தில் சிறப்பான போக்குவரத்து' தொடர்பாக, நேற்று நடந்த கருத்தரங்கில், துணை முதல்வர் அஸ்வத் நாராயணா பங்கேற்றார்.பின் அவர் கூறியதாவது:மின்சார வாகனங்கள், பயன்பாட்டுக்கு வந்தால் மட்டும் போதாது. அனைத்து இடங்களிலும், எளிதில் சார்ஜிங் செய்து கொள்ள, வசதி இருக்க வேண்டும்.அடுக்கு மாடி குடியிருப்புகள் உட்பட, பெரிய கட்டடங்களில், மின்சார வாகனங்களை, 'சார்ஜிங்' வசதி செய்து கொள்வது கட்டாயம். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.வரும் நாட்களில், பேட்டரி வாகனங்கள், மார்க்கெட்டுக்கு வரும். பொதுமக்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவர்.அனைத்து இடங்களிலும், பெட்ரோல் பங்க்குகள் போன்று, பேட்டரி பங்க்குகள் திறக்கப்படும். அப்போது மக்களுக்கு, குறைந்த விலையில் வாகனங்கள் கிடைக்கும். தங்களின் வசதிக்கேற்ப, பேட்டரியை பயன்படுத்தலாம்.வாகனங்களால் ஏற்படும், மாசு கட்டுப்படுத்த, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இதற்கு தேவையான மானியம், சலுகை கட்டணத்தில் மின்சாரம் உட்பட, தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.நாட்டிலேயே முதன் முறையாக, மின்சார வாகன கொள்கையை, செயல்படுத்திய மாநிலம், கர்நாடகா. புகையில்லா வாகனங்கள் பயன்பாட்டுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.மாநிலத்தில், மின்சாரம் பற்றாக்குறை இல்லை. மின்சார வாகனங்களுக்கு, வர்த்தக பயன்பாட்டு மின்சாரத்தை விட. குறைந்த கட்டணத்தில், மின்சாரம் வழங்கப்படும். இனியும் இச்சலுகை தொடரும்.மாநிலத்தில் அடிப்படை வசதிகள் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை, மின்சாரம், குடிநீர் என அனைத்து வசதிகளும், மேம்பாடு அடையும்.மின்சார வாகனங்கள் தயாரிக்கவும், அதற்கு தேவையான தொழிற்சாலைகளை அமைக்கவும், அரசு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X