பெங்களூரு:ஊழல் நடப்பது தெரிய வந்தால், தகவல் தெரிவிக்கும்படி, பொதுமக்களிடம், சி.பி.ஐ., வேண்டுகோள் விடுத்துள்ளது.இ துவரை, தன்னிடம் வந்த வழக்குகளை மட்டும், சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்தது. தற்போது ஊழல்வாதிகளுக்கு, கடிவாளம் போட முன் வந்துள்ளது.சி.பி.ஐ., பெங்களூரு அலுவலகம், மொபைல் குறுந்தகவல் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஊழலை கட்டுப்படுத்துவதில், பொது மக்களின் பங்களிப்பும் உள்ளது. அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உட்பட, எந்த அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்பது; ஊழலில் ஈடுபட்டது; சட்டவிரோதமாக சொத்து சம்பாதித்தது தெரிய வந்தால், பொதுமக்கள், சி.பி.ஐ.,க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இது தொடர்பாக, 080 - 2333 1026 மற்றும் 94816 06810 என்ற மொபைல் போனில், தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE