பொது செய்தி

இந்தியா

ஒழுங்கு நடவடிக்கை : கர்நாடக, டி.ஜி.பி., உத்தரவு

Added : பிப் 23, 2021
Share
Advertisement
பெங்களூரு: குற்ற வழக்குகள் விசாரணையின் போது, குளறுபடி செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக, டி.ஜி.பி., பிரவீண் சூட் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:காவல் நிலையங்களில், பதிவான வழக்குகள் குறித்து, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து, தீர்ப்பு வெளியாகும் போது, விசாரணையில் நடந்த குளறுபடிகள்

பெங்களூரு: குற்ற வழக்குகள் விசாரணையின் போது, குளறுபடி செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக, டி.ஜி.பி., பிரவீண் சூட் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:காவல் நிலையங்களில், பதிவான வழக்குகள் குறித்து, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து, தீர்ப்பு வெளியாகும் போது, விசாரணையில் நடந்த குளறுபடிகள் பற்றி, குறிப்பிடப்படுகிறது.குற்றவாளிகளின் வசதிக்காக, விசாரணை அதிகாரிகள், குளறுபடி செய்து லாபமாக்கிக்கொள்ளும் சம்பவங்கள், அவ்வப்போது நடக்கின்றன.ஏற்கனவே நீதிமன்றங்களில் முடிக்கப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்வதற்காக, அமைக்கப்பட்ட கமிட்டியும் கூட, தவறு செய்த ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, சிபாரிசு செய்துள்ளது.இதை செயல்படுத்தும் நோக்கில், போலீஸ் துறை, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.கமிட்டி சிபாரிசு செய்த விதிமுறைகளை, சிறப்பாக செயல்படுத்த வேண்டும். குற்ற வழக்குகளின் விசாரணையில், தவறு செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்கு விசாரணையில், குளறுபடி செய்த அதிகாரிகள், ஊழியர்கள் இடமாற்றமாகி, வேறு இடங்களில் பணியாற்றினால், அவர்களின் பெயர்; முகவரி; அவர்கள் கடமை தவறியதற்கான ஆவணங்களை சேகரித்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, அந்தந்த பிரிவு முக்கியஸ்தர்களுக்கு அனுப்ப வேண்டும்.டெபுடி எஸ்.பி., எஸ்.பி., மற்றும் அதற்கும் மேற்பட்ட பதவியில் உள்ள அதிகாரிகள் தவறு செய்திருந்தால், அவர்கள் பற்றிய தகவல்களை, போலீஸ் தலைமை அலுவலகங்களுக்கு, அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X