அரசியல் செய்தி

தமிழ்நாடு

கஜானாவை காலி செய்தும் கோரப்பசி அடங்கவில்லை; ஸ்டாலின் தாக்கு

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (76)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரித்ததை விமர்சித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ‛கஜானாவை முற்றும் காலி செய்தும், பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் கோரப்பசி அடங்கவில்லை' என கடுமையாக விமர்சித்துள்ளார்.இன்று (பிப்.,23) தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக திமுக.,வினர் பேச வாய்ப்பளிக்குமாறு கோரியதை
DMK, Stalin, TamilnaduDebt, EPS, OPS, MKStalin, திமுக, ஸ்டாலின், தமிழகம், கடன்சுமை, முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், கஜானா

சென்னை: தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரித்ததை விமர்சித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ‛கஜானாவை முற்றும் காலி செய்தும், பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் கோரப்பசி அடங்கவில்லை' என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று (பிப்.,23) தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக திமுக.,வினர் பேச வாய்ப்பளிக்குமாறு கோரியதை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. திமுக வெளிநடப்பு செய்தது குறித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனை சுமத்தியுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


latest tamil news10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு வருகிறது. முதல்வரும் துணை முதல்வரும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப்பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள். 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி. இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும்.


latest tamil newsகொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய ஏழை - எளிய, நடுத்தரப் பிரிவு மக்களுக்கு உயிர் வாழ்வதற்கு நேரடி பண உதவியை, பலமுறை மன்றாடிக் கேட்டும், வழங்கிட முன்வரவில்லை. தற்போது 1000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை எடுத்து, தண்ணீராக தாராளமாக வாரி இறைத்து, விளம்பரங்கள் வழங்குவதிலும் ஊழல் செய்து, தமிழகத்தின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி. வேலைவாய்ப்பும் இல்லை; தொழிற்சாலையும் இல்லை என்பதை விட, மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலையை தமிழகத்தை ஏற்படுத்தி, இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்கள்.


latest tamil newsகஜானாவை முற்றும் காலி செய்தும், இன்னும் இந்த இருவரின் கோரப்பசி அடங்கவில்லை. எந்தத் திட்டத்தில் எவ்வளவு ஊழல் செய்ய முடியும் என்று பேயாட்டம் ஆடுகிறார்கள். தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடி; அதாவது பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை. கடன் வாங்கி கமிஷன் அடித்த பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகியோரை கண்டித்து இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
24-பிப்-202105:07:24 IST Report Abuse
Narayanan Stalin you too announce to give-up loan given to farmers loan, educational loan, jewel loan, ladies self helped loan etc., If you are elected, are you going to bring the money for that project from your home or from your party ? You will also will do the same thing. So no use for us.
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
23-பிப்-202123:45:15 IST Report Abuse
Truth Triumph திமுக ஆட்சி காலம் நன்றாக வேதனை... இந்த ஈன பிறவிகளுக்கு எப்படி வாக்களிக்கிறர்கள் என்றே புரியவில்லை .. திமுக மற்றும் கூட்டணி அதற்கு ஆதரவு வாக்கு அளித்தவர்கள் எல்லாரும் சாத்தன் வகையறாக்கள் ... இதை வளர விடக்கூடாது ...நல்லவர்களுக்கு எச்சரிக்கை ....
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
23-பிப்-202122:25:16 IST Report Abuse
adalarasan ellam ஒரே குட்டைல ஓரின மட்டங்கதான்?நீங்க மாட்டயம் என்ன சேர்த்து வைத்தா போனீங்க? இப்பவே இலவசங்கல்,, கடன் தள்ளுபிடி, என்று, மக்கள் பணத்தை வாரி இறைப்பேன் என்கிறீர்கள்?இன்னும் தேர்தல் நெருங்க பதவி ,வெறியில்,அரசியல்பவா திகள என்னென்ன வாரி, கொடிப்பீர்களோ எதுவா இருந்தாலும், இப்படி தினமம்,, கதறுவது கொஞ்சம் ஓ வரா இருக்கு?சகிக்கல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X