பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி, ஸ்டாலின் பற்றி விமர்சித்த செந்தில்பாலாஜி; வீடியோயை ஒளிபரப்ப ரத்தத்தின் ரத்தங்கள் தயார்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., வில் கரூர் மாவட்ட செயலாளராகவும், 2011-14 ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அப்போதைய, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் ஸ்டா லின் ஆகியோரை, பொதுக்கூட்ட மேடைகளில் கடுமையாக, ஒமையில் விமர்சனம் செய்தார். மேலும் கடந்த, 2009 ல் நடந்த லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில், தி.மு.க., சார்பில்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., வில் கரூர் மாவட்ட செயலாளராகவும், 2011-14 ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அப்போதைய, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் ஸ்டா லின் ஆகியோரை, பொதுக்கூட்ட மேடைகளில் கடுமையாக, ஒமையில் விமர்சனம் செய்தார். மேலும் கடந்த, 2009 ல் நடந்த லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிசாமி, 2014 ல் போட்டியிட்ட, மாநில, தி.மு.க., விவசாய அணி செயலாளர் சின்னசாமி ஆகியோர் குறித்தும், செந்தில் பாலாஜி கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். அந்த வீடியோ தொகுப்பு களை, அ.தி.மு.க., வினர் தெருமுனை பிரச் சார கூட்டங்களில் ஒளிபரப்ப திட்டமிட்டு ள்ளனர்.

ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகையில், ' செந்தில் பாலாஜி, கட்சி மாறுவதற்கு முன் வரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் மீதும், கரூர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மீதும், கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். செந்தில் பாலாஜி, அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறைக்கு ஜி.பி.எஸ்., கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என, கருணாநிதியே கூறியுள்ளார். தி.மு.க., தொழிற்சங்கமும் போராட்டங்களை நடத்தியது.' 'அ.ம.மு.க., வில் செந்தில் பாலாஜி இருந்த போது, லோக்சபா துணை சபாநாயகர் தம்பி துரை, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரை தாக்கி பேசினார். தற்போது, தி.மு.க., வில் சேர்ந்து கொண்டு, அ.தி.மு.க., வை சுயநலத்துக்காக தாக்கி பேசி வருகிறார்.' 'இதனால், செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., வில் இருந்த போது, தி.மு.க., வினரை தரக்குறை வாக பேசிய, வீடியோக்களை ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குறிப்பாக, செந்தில் பாலாஜி, தி.மு.க., சார்பில், எந்த தொகுதி யில் போட்டியிட்டாலும், இத்தகைய வீடியோ க்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு, அவரது முகத் திரை கிழிக்கப்படும்' என்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X