கரூர், லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில் பழைய காந்தி சிலைக்கு பதிலாக, புதிய சிலை அமைக்கப்பட்டு, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். கடந்த, 20 ல் காங்.,- எம்.பி., ஜோதிமணி, பழைய சிலையை மீண்டும் வைக்க வேண்டும், கட்டுமான சரியில்லை என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர். அவரின், 'நாடக போராட்டத்திற்கு' சொந்த கட்சி நிர்வாகிகளில் ஆதரவு இல்லாமல் போகவே, தி.மு.க.,வினரை நம்பி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. இந்த போராட்டம் காந்தி சிலைக்காக நடந்ததாக ஜோதிமணி காட்டிக்கொண்டாலும், உண்மையில் உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக, தி.மு.க., பிரமுகரால் கொம்புசீவி விடப்பட்டு, ஜோதிமணியால் நடத்தப்பட்ட போராட்டம் தான். கரூர் லைட் ஹவுஸ் கார்னரில், இருந்த காந்தியில் மார்பளவு சிலையை எடுத்து விட்டு, முழு உருவ சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. காரணம் அந்த இடத்தில் தன் சொந்த செலவில் உள்ளூர் அமைச்சர், அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு சிலை திறக்க திட்டமிட்டு, சத்தமில்லாமல் முதல்வரை வைத்து திறந்து வைத்தார். அந்த இடத்தில், தி.மு.க.,வினர் கருணாநிதி சிலை திறக்க திட்டமிட்டிருந்தனர். முந்திக்கொண்ட உள்ளூர் அமைச்சர், அதே இடத்தில், 3 சிலைகளை திறந்தார். அந்த உயரத்துக்கு ஏற்ப காந்திக்கும் சிலை வைக்க திட்டமிட்டு, சிலை குழுவினர் மூலம் மார்பளவு சிலையை முழு உருவ சிலையாக மாற்றி விட்டார். இதனால்,கடுப்பான, தி.மு.க., தரப்பு, தாங்கள் போராட்டம் நடத்தினால் சிக்கல் வந்து விடும் என உணர்ந்து. காங்.,- எம்.பி., ஜோதிமணியை கொம்பு சீவி அனுப்பியது. அவரும் தன்னால் என்னென்ன முடியுமோ, அத்தனையும் அந்த ஆர்ப்பாட்டத்தில் செய்து காட்டினார். அவர் எப்படி செயல்பட வேண்டும் என, பின்னால் இருந்து ஒருவர் லைவ் கமென்ட் கொடுக்க அதன்படியே ஜோதிமணி நடந்து கொண்டது தான், ?ஹலைட்டான, 'காமெடி'
கரூர் மாவட்டத்தில், ஜோதிமணி ஆதிக்கம் செலுத்தியது முதல், காங்., முக்கிய நிர்வாகிகள் ஓரங்கட்டுப்பட்டு விட்டனர். டெல்லி தலைமையில் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, தான் வளர்த்த, தன் ஆதரவாளர்களை மட்டுமே தனக்கு வேண்டிய இடங்களில் நிர்வாகிகளாக நியமித்துள்ளார். கட்சியின் மாநில தலைவராக ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் ஜோதிமணி நடத்திய, நாடக போராட்டத்திற்கு, பெரும்பாலான உள்ளூர் நிர்வாகிகள் வரவில்லை. மாவட்ட தலைவர் சின்னசாமி உட்பட விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில், தலை காட்டா விட்டால், தலைமைக்கு போட்டு கொடுத்து விடுவர் என்ற பயத்தில் தான் அவர்கள் கூட வந்திருந்தனர். அன்றைக்கு நடத்த போராட்டத்தில் கைதானவர்கள் பெரும்பாலும், தி.மு.க., நிர்வாகிகள் தான். ஜோதிமணி, காங்., நிர்வாகிகளை மதிப்பே கிடையாது. தி.மு.க.,வின் கரூர் மாவட்ட பொறுப்பில் உள்ள முக்கிய புள்ளி கண் அசைத்தால் மட்டுமே, அவரிடம், சிபாரிசு கடிதம் பெறுதல் உட்பட எந்த வேலையும் நடக்கும். அதனால் தான், காந்தி சிலைக்காக, உள்ளூர் காங்., நிர்வாகிகள் ஆதரவு காட்டவில்லை. அதன் பின்னர் தான், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களை வரவழைத்து போராட்டம் நடத்தியுள்ளார் ஜோதிமணி.காங்., கட்சி நிலமை இந்த அளவுக்கு மோசமா போகுமுன்னு யாரும் நினைக்கல.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE