பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் 12 கோஷ்டிகள்; தி.மு.க.,உள்குத்து அரசியலால் தலைமை அலறல்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
முதல்வர் பழனிசாமி, அவரது சொந்த ஊரான இடைப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். சேலம், முதல்வர் மாவட்டம் என்பதால், 11 சட்டசபை தொகுதிகளிலும், வெற்றிபெற்று, 'கெத்து' காட்ட வேண்டிய கட்டாயம் ஆளும், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்டணிக்கு ஒதுக்கும், ஒன்றிரண்டு தொகுதிகளையும் சேர்த்து, வெற்றிபெற செய்ய வேண்டியது, அ.தி.மு.க.,வின், தலையாய கடமை. அதற்கான, பூர்வாங்க பணிகளை,

முதல்வர் பழனிசாமி, அவரது சொந்த ஊரான இடைப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். சேலம், முதல்வர் மாவட்டம் என்பதால், 11 சட்டசபை தொகுதிகளிலும், வெற்றிபெற்று, 'கெத்து' காட்ட வேண்டிய கட்டாயம் ஆளும், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்டணிக்கு ஒதுக்கும், ஒன்றிரண்டு தொகுதிகளையும் சேர்த்து, வெற்றிபெற செய்ய வேண்டியது, அ.தி.மு.க.,வின், தலையாய கடமை. அதற்கான, பூர்வாங்க பணிகளை, அக்கட்சி முடுக்கிவிட்டுள்ளது. அதே நேரம், முதல்வருக்கு எதிராக, தி.மு.க.,வும், தன் பலத்தை காட்ட, களத்துக்கு தயாராகி வருகிறது. இது தொடர்பாக, தி.மு.க.,வை வழிநடத்தும், ஐ-பேக் நிறுவனம் நடத்திய ஆய்வு, அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள, பின்னடை வெளிச்சம் பாட்டு காட்டியுள்ளது. அ.தி.மு.க.,வை விட, தி.மு.க.,வில், 'குஸ்தி' அதிகமாக உள்ளது. அது, நாளுக்கு,நாள் அதிகரிப்பதை தடுக்க முடியவில்லையென, அக்கட்சியினரே புலம்புகின்றனர்.
சேலம் மாவட்டம் பொறுத்த வரை, அ.தி.மு.க..,வினரை, தன்வயப்படுத்தும், அதீத சக்தி, முதல்வர் பழனிசாமிக்கு உண்டு. அதேபோல, தி.மு.க.,வை கட்டுப்படுத்தக்கூடிய வசீகரம் பொருத்திய தலைமை இல்லை. சேலத்தில், வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பின், தி.மு.க.,வில் ஏற்பட்ட கோஷ்டி பூசல், தி.மு.க.,வை சரித்தது. அதை சரிக்கட்ட, மூன்று மாவட்டமாக பிரிந்தும், அக்கட்சி கோஷ்டிபூசலை, கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், அவைத்தலைவர் கலையமுதன், மாநகர செயலர் ஜெயக்குமார் ஆகியோர் இடையே, மனகசப்பு உள்ளது. மூவரும் தனித்தனி அணியாக செயல்படுகின்றனர். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, அவைத்தலைவர் கோபால் இடையே, இணக்கமான உறவு இல்லை. கோபால், வீரபாண்டி ராஜாவின், ஆதரவாளராக இருப்பதுடன், தற்போது, எம்.பி., பார்த்திபனுடன் இணைந்து அரசியல் செய்து வருகிறார். அத்துடன், தற்போது நங்கவல்லி ஒன்றிய செலாளர் ரவிச்சந்திரன், தன் பங்குக்கு கோஷ்டியை உருவாக்கி வலம் வருகிறார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்., சிவலிங்கம், பனைமரத்துப்பட்டி ஒன்றிய செயலர் பாரப்பட்டி சுரேஷ்குமாருடன் இணைந்து, தனியாக களம் அமைத்து கொண்டார். அதனால், அவருக்கும், தேர்தல் பணிக்குழு செயலர் வீரபாண்டி ராஜாவுக்கு, ஏழாம் பொருத்தமாக உள்ளது. அத்துடன், வீரபாண்டி ஆறுமுகத்தின், 2வது மனைவியான லீலாவதியின் மகன் டாக்டர் பிரபு, கிழக்கு மாவட்டத்தில், தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். இதேநிலை, தொண்டர்கள் வரையிலும், கொம்புசீவி விடப்பட்டுள்ளது. கொங்கவல்லித் தொகுதியில் சீட் எனக்கு தான் என உறுதியாக கூறிவரும், முன்னாள் சேலம் மேயர் ரேகா பிரியர்ஷினி, தனியாக தன் படை பலத்துடன் தொகுதியில் வலம் வருகிறார். தொகுதியில் வீடு பார்த்து குடியேறி விட்டார். அவர்கள் தவிர, சேலம், ஒருங்கிணைந்த மாவட்டத்தில், எம்.பி., பார்த்திபன், தனி கோஷ்டியாக, செலயபட்டு வருகிறார். குறிப்பாக, அவர், தே.மு.தி.க.,வில் இருந்து, தி.மு.க.,வுக்கு வந்ததால், மத்திய, மேற்கு மாவட்டத்தில் உள்ள அவரது பழைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து, தன் எல்லையை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறார்.

சேலம் மாவட்டத்தில், தி.மு.க.,வினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலின் பரிணாம வளர்ச்சி, சட்டசபை தேர்தல் வெற்றிக்கு, மிகப்பெரிய குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதே, ஐபேக் குழு, தலைமை, தி.மு.க., தலைமைக்கு அனுப்பிய அறிக்கையின் சாரம்சம். நிலைமைய சமாளிக்க, சேலம் மாவட்டம் பொறுத்தவரை, புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஏற்கனவே, போட்டியிட்டவர்கள், கட்சி மூத்தவர்களை தவிர்த்து, புதியவர்களுக்கு வாய்ப்பளித்தால் மட்டுமே, கோஷ்டி பூசலை புறந்தள்ளிவிட்டு, கட்சியினர் ஓஒளவுக்கு பணியாற்றுவர்; மற்ற கட்சிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த முடியும். அத்துடன், தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்காமல், தி.மு.க.,வினரை களமிறக்கினால் மட்டுமே, அ.தி.மு.க.,வை வீழ்த்தி, வெற்றி பெற முடியும். கூட்டணிக்கு, ஒன்றிரண்டு தொகுதியை விட்டுகொடுத்துவிட்டு, கடந்த தேர்தலை போல, 9 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும். கடந்த தேர்தலில் வடக்கு தொகுதியில் ராஜேந்திரன், கோஷ்டியை கடந்து வெற்றிபெற்றார். அதேநிலையை, எல்லா தொகுதிகளிலும், உருவாக்க, எந்தவித புகாரும் இல்லாத, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே, மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை, ஐ பேக் குழு, தி.மு.க., தலைமைக்கு சுட்டிக்காட்டியுள்ளது. அ.தி.மு.க.,வில், கூட்டணிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், தி.மு.க., கட்டாயம் போட்டியிட வேண்டும் என்றும், ஸ்டாலினிடம் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பார்த்து அலறதுவங்கிய, தி.மு.க., தலைமை, அதன் பின்னர் தான் சேலம் மாவட்ட முதல்கட்ட சுற்றுப்பயணத்துக்கு, எம்.பி., தயாநிதியை அனுப்பியது. அதன் பின்னர் ஸ்டாலின் நிகழ்ச்சிகளும், முதல்வரின் தொகுதியில் நடத்தப்பட்டது. கோஷ்டி பூசலை மீறி, தி.மு.க.,வுக்கு ஒளி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்கின்றனர் உடன் பிறப்புக்கள்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X