வேலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் வேலு நியமிக்கப்பட்டார். அவர் பரிந்துரை செய்பவர்களுக்கு தான் சீட் வழங்கப்படும் என்பது எழுதப்படாத சட்டம் என்றாகிவிட்டதால், வேலூர் மாவட்ட, தி.மு.க.,நிர்வாகிகள் அவரை சுற்றி வரத்துவங்கிகனர்.சிட்டிங் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் ஞானசேகரன், நீலகண்டன் போன்றோர், வேலூர் தொகுதிக்கு, அவரிடம் 'சீட்' கேட்டனர். கடந்த மாதம் ஐபேக் குழு நடத்திய ஆய்வில், வேலூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., கார்த்திகேயனுக்கு, மக்கள் கொடுக்கும் மனுக்களை படித்து பார்க்க தெரியவில்லை, தொகுதிக்கு அவர் எதுவும் செய்யாததால், வேறு வேட்பாளருக்கு, சீட் வழங்கும்படி பரிந்துரைத்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய டாக்டர் விஜய் உள்ளிட்ட சிலருக்கு சீட் வழங்க சிபாரிசு செய்தார். ஐ பேக் பரிந்துரையை நிராகரித்து, சிட்டிங் எம்.எல்.ஏ., கார்த்திகேயனுக்கு சீட் வழங்க முடிவாகியுள்ளதாம். இதனால், அதிர்ந்த ஐ பேக் குழு, துரைமுருகனிடம், நிலமையை விளக்கி, கார்த்திகேயனுக்கு சீட் கொடுத்தால், தோல்வி உறுதி என சுட்டிக்காட்டியதுடன், ' திருவண்ணாமலையில், 'பெட்டி' கலாச்சாரம் உள்ளதால், அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கட்சிக்கு ஒரு பெட்டி, தனக்கு ஒரு பெட்டி என, திருண்ணாமலையில் பேரம் நடப்பதால், வெற்றி பெறும் நபர் ஓரம்கட்டப்படுகிறார்' என, போட்டுக்கொடுத்தது. இதனால் கடுப்பான துரைமுருகன்,வேலுவை போனில் அழைத்து பிடித்து விட்டதோடு, தலைவரிடம் பேசுகிறேன் என சொல்லிவிட்டாராம். 'துரைமுருகன் சிபாரிசே, தி.மு.க.,வுல எடுபடலைன்னா, வேறு யாரு சொல்லி கேக்கப்போறாங்க... கட்சியில யாருடனும் சண்டை போடாத துரைமுருகனவே டென்ஷனாக்கி, சண்டை போட வச்சுட்டாங்க... போற போக்கப்பார்த்த, கட்சி தலைவரோட கட்டுப்பாட்டுல இருக்கா...இல்லை வேலுவோட கட்டுப்பாட்டுல இருக்கா'ன்னு சந்தேகமா இருக்கு...' என, துரை முருகன் ஆதரவாளர்கள் புலம்பிதவிக்கின்றனர். மொத்தத்துல வேலூரா, திருவண்ணமலையான்னு மோதல் ஆரம்பிச்சுடுச்சு.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE