பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்: சிவசேனா வலியுறுத்தல்

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
மும்பை: ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தியுள்ளது.நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
Shivsena, PetrolPriceHike, Saamana, RamMandir, Ram Temple, ராமர் கோவில், பெட்ரோல், டீசல், விலை உயர்வு, சிவசேனா, சாம்னா

மும்பை: ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அயோத்தியில் ராமா் கோவில் கட்டுவதற்கான நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் கோவில் கட்ட நன்கொடை வசூலிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது.


latest tamil newsராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள். இதனால் ராமர் பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். ராமரும் சந்தோஷப்படுவார். 2014-ம் ஆண்டு வரை கருத்து கூற சுதந்திரம் இருந்தது. அப்போது அரசை விமர்சிப்பவர்கள் தேசதுரோக வழக்கில் சிறையில் அடைக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூற முடியாமல் பேச்சுரிமையை இழந்துள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
24-பிப்-202110:22:40 IST Report Abuse
Ramaswami Sampath இப்போது இருபத்தி இரண்டு ஆயிரம் கோடி செலவில் புது பார்லிமென்ட் கட்டிடம் தேவைதானா? இருக்கிற கட்டிடம் நன்றாகத்தானே இருக்கிறது அதற்கு பொதுமக்களை மொட்டை அடித்து வரிவசூலிக்கவேண்டுமா?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
23-பிப்-202121:07:30 IST Report Abuse
bal இவன் எதற்கு மாநில வரியை குறைக்கவில்லை ????
Rate this:
Cancel
23-பிப்-202121:02:48 IST Report Abuse
சம்பத் குமார் 1). முதலில் குரோனோவை மகாராஷ்டிராவில் கண்ட்ரோல் பண்ண முயற்சி செய்யுங்கள். கொரனோ பிரச்சினை சமாளிக்க மக்களை கவனத்தை திசை திருப்ப ஸ்டண்ட் அடிக்க கூடாது.2). மகாராஷ்டிராவும் கேரளாவும் இதுவரை கொரோனாவிலிருந்து வெளிவராததால் உங்களுக்கு உடனடியாக உதவி செய்யனுமும் எங்கள்‌ ஆண்டவர் கமல்ஹாசன் ஜி சொல்லியிருக்கிறார்.3). petrol diesel விலையை முதல் முன்னோடி மாநிலமாக GST கீழ் கொண்டு வாங்க. மத்திய அரசுக்கு எதுக்கு Wait பண்ணறீங்க. நீங்களே நாளைக்கு GST கீழ் petrol diesel விற்க ரெடி என்று சொல்லுங்க. நாங்க எல்லோரும் தமிழ்நாட்டில் இருந்து டிரெயின் ஏறி வந்து உங்களை மேடை போட்டு பாராட்டி விட்டு வருகிறோம்.4). உங்களை மாதிரி பச்சோந்தியை பார்த்தது இல்லை. நேரம்தான். மேலே போன ஏரோஃபிளேன் கீழ் இறங்கி வந்துதான் ஆகனும். wait பண்ணறங்க. நன்றி ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X