பொது செய்தி

இந்தியா

ஓவியம் பரிசளித்த சிறுவனுக்கு பிரதமர் பாராட்டி கடிதம்

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
துபாய்: இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்டென்சில் ஓவியத்தை பரிசாக அளித்த, துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவனை பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் பிரதமர் மோடி கடிதம் அனுப்பி உள்ளார்.கேரளாவை பூர்விகமாக கொண்ட சரண் சசிகுமார் என்ற 14 வயது சிறுவன் தற்போது பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறார். அங்கு 9ம் வகுப்பு படித்து வருகிறார். குடியரசு தினத்தை
Indian Teen,UAE, Heartfelt  Letter,Thanks, PM , Stencil Portrait

துபாய்: இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்டென்சில் ஓவியத்தை பரிசாக அளித்த, துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவனை பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் பிரதமர் மோடி கடிதம் அனுப்பி உள்ளார்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட சரண் சசிகுமார் என்ற 14 வயது சிறுவன் தற்போது பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறார். அங்கு 9ம் வகுப்பு படித்து வருகிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு, சரண் சசிக்குமார், பிரதமர் மோடி ஓவியத்தை ஸ்டென்சில் ஓவியமாக வரைந்துள்ளார். அதனை, மத்திய அமைச்சர் வி.முரளீதரன் மூலமாக பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.


latest tamil newsஇந்த ஓவியத்தை பெற்று கொண்ட பிரதமர் மோடி, அந்த சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: நமது எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சிறந்த கருவியாக ஓவியம் உள்ளது. நீங்கள் வரைந்த ஓவியமானது, ஓவியத்தின் மீது நீங்கள் வைத்துள்ள அர்ப்பணிப்பையும், நாட்டின் மீதான அன்பு மற்றும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறது. இனி வரும் காலங்களில், உங்களது திறமையை இன்னும் அதிக தூரத்திற்கு கொண்டு செல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். இன்னும் அழகான ஓவியங்கள் வரைய வேண்டும் எனவும், அதே நேரத்தில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். சிறப்பான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


latest tamil news


இந்த கடிதத்தை வெளியிட்டுள்ள சரண் சசிகுமார், எனது ஓவியத்தை அன்பான வார்த்தைகள் மூலம் பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றிகள். இந்த பாராட்டானது, என்னை போன்ற கலைஞர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. எனது ஓவியம், பிரதமர் அலுவலகம் வரை சென்றடைய காரணமான அமைச்சர் முரளிதரன் மற்றும் இந்திய தூதரகத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-பிப்-202123:06:32 IST Report Abuse
Vena Suna சிறுவனின் திறமை அற்புதம்...
Rate this:
Cancel
23-பிப்-202118:34:46 IST Report Abuse
ஆப்பு sychophants in the making...No different from Indira is India crowd of the 80s.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X