ஈரோடு: ஈரோடு மாவட்டம் பன்னாரி பகுதியை சேர்ந்த சேகரன் (52), சலவைத்தொழிலாளி. இவர் இன்று காலை 8 மணிக்கு தனியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்த சேகரன், அன்னூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மதியம் 1 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி நாகரத்தினம் (46) அதே மருத்துவமனையின் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE